Latest News

July 21, 2015

கண்காணிப்பு பணியை ஆரம்பித்தது -ஐரோப்பிய தேர்தல் கண்காணிப்புக் குழு
by Unknown - 0

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலைக் கண்காணிப்பதற்காக இங்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் குழு தமது கண்காணிப்பு பணியை ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளது. 

ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழு இன்று விடுத்துள்ள அறிக்கையிலே தாம் கண்காணிப்பு பணிகளை ஆரம்பித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.   நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கு சர்வதேச கண்காணிப்பு அவசியம் எனக் கருதிய தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் குழுவிற்கு அழைப்பு விடுத்தார்.   

இந்த அழைப்பினை ஏற்று இலங்கை வந்தடைந்த குறித்த குழுவினர் தமது பணிகளை ஆரம்பித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த குழுவில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சேர்ந்த 70 உறுப்பினர்கள் உள்ளடங்குகின்றனர்.   

ரோமானியாவின் நாடாளுமன்ற உறுப்பினரான கிறிஸ்டியன் பிரிடா, ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழுவிற்கு தலைமை தாங்குகின்றார்.   ஏற்கனவே ஐவரிகோஸ்ட் மற்றும் கென்யா போன்ற நாடுகளில் நடைபெற்ற தேர்தல்களை கண்காணித்த குழுக்களுக்கும் இவர் தலைமை தாங்கியிருந்தாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்புக் குழு அறிவித்துள்ளது. 
« PREV
NEXT »

No comments