Latest News

July 24, 2015

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு பொலிஸார் தடை!
by Unknown - 0

யாழ்.தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல்கால செயற்பாடுகளுக்கு பொலிஸார் தடையாக இருப்பதுடன், பிரச்சார நடவடிக்கைகளை முடக்கும் வகையில் கட்சியின் ஆதரவாளர்களை பொலிஸார் கைது செய்து வருவதாகவும் அக்கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் கட்சியின் ஊடகப்பேச்சாளர் வி.மணிவண்ணன் கருத்து தெரிவிக்கையில்,

நேற்றைய தினம் கிளிநொச்சி- பூநகரி பகுதியில் எமது கட்சியின் ஆதரவாளர் ஒருவர் தேர்தல் விளம்பர போஸ்டர்களை வாகனத்தில்தில் தனியாக கொண்டுவந்த நிலையில், இரவு 11மணிக்கு வீதியில் நின்று பிரசுரங்களை விநியோகித்ததாக குற்றஞ்சாட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதேவேளை இன்றைய தினம் யாழ்.நகரில் கட்சி ஆதரவாளர் ஒருவர் ஆத்திசூடி வீதியில் துண்டுப் பிரசுரங்களை வீடுகளில் வழங்கிக் கொண்டிருந்த நிலையில், பொலிஸாரினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆனால் வேட்பாளர் அல்லாதவர்கள் மக்களுடைய வீடுகளுக்குச் சென்று பிரச்சாரம் செய்யலாம் என பொலிஸாரும், தேர்தல் திணைக்களமும் அறிவித்துள்ளதுடன் 1981ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல்கள் சட்டத்திலும் இது குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

எனவே தமது கட்சியை மட்டும் இலக்குவைத்து இவ்வாறான கைதுகள் இடம்பெறுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »

No comments