Latest News

July 22, 2015

தூக்கு மேடையில் நிறுத்துவதற்கு யாராவது பணம் கொடுப்பார்களா? சிவாஜிலிங்கம்
by admin - 0

இனப்படுகொலைக் குற்றவாளியான மகிந்த ராஐபக்ஷவை சர்வதேச குற்றவியியல் நீதி மன்றத்தின் முன்னால் நிறுத்தி தண்டணை வழங்க வேண்டுமென்று வலியுறுத்தி வருகின்ற எனக்கு மகிந்த எவ்வாறு கோடிக்கணக்கில் பணத்தை வழங்குவார் என்று சிந்திக்க வேண்டுமென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
 
தன்னைத் தூக்கு மேடையில் நிறுத்துவதற்கு யாராவது பணம் கொடுப்பார்களா? என்று முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சிந்திக்காது விட்டாலும் பரவாயில்லை முட்டாள் தனமான கருத்துக்களை வெளியிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டுமென்றும் சிவாஜிலிங்கம் கோரியுள்ளார்
 
நடபெறவுள்ள பொதுத் தேர்தலில் முன்னாள் ஐனாதிபதி மகிந்த ராஐபக்ஷ போட்டியிடுகின்ற குருநாகல் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஐpலிங்கம் பல கோடி ருபாய்கள் பேரம் பேசியே தேர்தலில் போட்டியிடுவதாக முன்னாள் அமைச்சர் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடகவியியலாளர் சந்திப்பொன்றின் போது பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டியிருந்தார்.
 
இந் நிலையில் அமைச்சரின் குற்றச்சாட்டிற்குப் பதிலளிக்கும் வகையில் யாழ் ஊடக அமையத்தில் நேற்று மதியம் விசேட ஊடகவியியலாளர் சந்திப்பொன்றை நடாத்திய சிவாஜிலிங்கம் அமைச்சர் டக்ளஸின் குற்றச்சாட்டை முற்றாக நிராகரித்துள்ளதுடன் அமைச்சரின் மீதும் சரமாரியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.
 
இதன் போது சிவாஜிலிங்கம் தெரிவித்ததாவது...
 
கடந்த 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளைப் பிரிப்பதற்காக முன்னாள் ஐனாதிபதி மகிந்த ராஐபக்சவுடன் நான் பேரம் பேசியே தேர்தலில் போட்டியிட்டதாகவும் இதற்கமைய முதற்கட்டமாக மூன்று கோடி ருபா வழங்கப்பட்டடதாகவும் தேர்தல் முடிவடைந்த பின்னர் மீதி வழங்கவில்லை என்றும் அதே போன்றே இத் தேர்தலிலும் பேரம் பேசியிருக்கலாம் என்றும் டக்ளஸ் தேவானந்த தெரிவித்திருக்கின்றார்.
 
டக்ளஸின் விசமத்தனமான குற்றச்சாட்டை முற்றாக நிராகரிப்பதுடன் தேர்தலில் வாக்குகளைச் சேகரிப்பதற்காக கட்டுக் கதைகளை அவிழ்த்து விடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன். கடந்த 2010 நடந்த ஐனாதிபதித் தேர்தலில் இனப்படுகொலைக் குற்றவாளிகளான சரத் பொன்சேகா மற்றுமு; மகிந்த ராஐபக்ச ஆகிய இருவரையும் தமிழ் மக்கள் சார்பில் நிராகரிக்க வேண்டுமென்றே நான் போட்டியிட்டேன்.
 
இதனை விடுத்து அத் தேர்தலில் வெல்வதற்கோ அல்லது அதிக வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்கோ அல்ல. குற்றவாளிகளை நிராகரித்து எதிர்பதனுடாக எமது பிரச்சனைகளையும் எமது நிலைப்பாடுகளையும் நாம் தெளிவாக எடுத்தியம்ப முடியும். குறிப்பாக இத் தேர்தலின் போதும் படுகொலைக் குற்றவாளியான மகிந்தவை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டுமென்றே கோரியிருந்தேன். 
 
அவ்வாறு நிறுத்தி தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்pறே இன்றும் கோருகின்றேன்.அவ்வாறு தூக்கு மேடையில் நிறுத்துவதற்காக கோரி வருகின்ற எனக்கு யாராவது கோடி ருபாய்க்களை தருவார்களா? என்று டக்ளஸ் சிந்திக்க வேண்டாமா எனவும் கேட்டுள்ளார்.
 
இதே வேளையில் இத் தேர்தலிலும் நான் குருநாகலில் கேட்பதற்கான காரணங்களைப் பகிரங்கமாவே பல தடவைகள் உள்நாட்டு வெளிநாட்டு ஊடகங்கள் மூலமாக அறிவித்திருக்கின்றேன். குறிப்பாக வெறுமனே மகிந்த ராஐபக்சவை மட்டுமல்லாது மகிந்த மற்றும் ரணில் மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகிய மூவரிற்கும் எதிர்ப்பைக் காட்டும் வகையிலையே போட்டியிடுகின்றேன். 
 
இதனைவிடுத்து டக்ளஸ் தேவானந்தா போன்று எம்மீது கட்டுக் கதைகளையும் பொய்ப் பிரச்சாரங்களையும் மேற்கொண்டு மக்களிடம் வாக்குக் கேட்பதனை விடுத்து மக்களிடம் உண்மையைச் சொல்லி வாக்கு கேட்டுப் பாருங்கள் அப்போது மக்களே உங்களுக்கு தக்க பதிலடியை கொடுப்பார்கள் என்றும் தெரிவித்தார்.
« PREV
NEXT »

No comments