Latest News

July 30, 2015

கலாம் அவர்களின் உடல் அடக்க நாளில் ஒருவரை தூக்கிலிடுவது கலாமுக்கு செலுத்தப்பட்ட கொடிய அஞ்சலி: ராமதாஸ்.
by அகலினியன் - 0

கலாம் அவர்களின் உடல் அடக்க நாளில் ஒருவரை தூக்கிலிடுவது கலாமுக்கு செலுத்தப்பட்ட கொடிய அஞ்சலி: ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் (30.07.2015) இன்றைய டுவிட்டர் பதிவுகள்

1) மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டதில் விதிமுறைகள் மீறப்பட்டது கண்டிக்கத்தக்கது

2) யாகூப் மேனனை தூக்கிலிடுவதில் காட்டப்பட்ட அவசரம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்: அவரது  கடைசி மனுவை உச்சநீதிமன்றம் ஆழ்ந்து ஆய்வு செய்திருக்க வேண்டும்

3) தூக்கு தண்டனையை ஒழிக்கக் கோரிய கலாமின் உடல் அடக்க நாளில் ஒருவரை தூக்கிலிடுவது கலாமுக்கு செலுத்தப்பட்ட கொடிய அஞ்சலி.

4) இந்தியாவில் தூக்குத் தண்டனையை ஒழிப்பது தான் காந்தியடிகளுக்கும், கலாமுக்கும் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.

5) தி.மு.க. தேர்தல் அறிக்கையில் மது விலக்குக்கு முக்கியத்துவம்: தேர்தல் அறிக்கையை தயாரிப்பவர் மது ஆலை அதிபர் - ஆஹா.... என்ன பொருத்தம்!
« PREV
NEXT »

No comments