Latest News

July 26, 2015

நாடு மீண்டும் யுத்தம் ஒன்றுக்குள் தள்ளப்படும் அபாயம்-கோத்தபாய
by Unknown - 0

மைத்திரி – ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் நாட்டின் பாதுகாப்பை மிகவும் குறைந்த மட்டத்தில் கருதுவதாகவும் வடக்கில் தற்போது பல்வேறு சட்ட மீறல்கள் நடப்பதாகவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சுவரொட்டிகளை ஒட்டுவது முதல் வடக்கில் சட்டத்தை கவனத்தில் கொள்ளாத நிலைமை காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

பண்டாரகம மைத்திரி மண்டபத்தில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

1980 ஆம் ஆண்டுகளில் வடக்கில் இதே போன்ற நிலைமைகளை காண முடிந்தது. நாட்டின் பாதுகாப்பு குறித்து கவனத்தில் கொள்ளாது செயற்பட்டால், நாடும் மீண்டும் அறியாமலேயே யுத்தம் ஒன்றுக்குள் தள்ளப்படும் எனவும் கோத்தபாய ராஜபக்ச கூறியுள்ளார்.
« PREV
NEXT »

No comments