Latest News

July 13, 2015

தரையில் வைத்து கடற்படையினரின் தொடர்வண்டியை சிதறடித்த கரும்புலிகள்..!!
by admin - 0

தரையில் வைத்து கடற்படையினரின் தொடர்வண்டியை சிதறடித்த கரும்புலிகள்..!!

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் சிங்கள இராணுவத்திற்கு எதிரான போரில் தமிழர் தரப்பால் சிங்களம் பெரும் படைச் சிதைவை சந்தித்து வந்தது. போராட்ட சூழ்நிலையுடன், அன்றைய காலக்கட்டத் தேவைக்கு ஏற்றால் போலவே புலிகளின் தாக்குதலும் தெரிவு செய்யப்படும். இதுவே புலிகளின் முக்கிய பலமும்.

அதில் பிரதானமானது தாக்குதலில் கிடைக்கும் வெற்றியே. இதில் சில தாக்குதல்கள் பின்னடைவைத் தந்தாலும் பெரும் பான்மையான தாக்குதல்கள் தமிழர் தலைகளை நிமிரவே செய்துள்ளது. இதில் மிக முக்கியமான தாக்குதல், ஹபரணை திகம்பத்தனையில் சிறீலங்கா கடற்படையினரின் தொடரணி மீது நடத்தப்பட்ட கரும்புலித் தாக்குதல் ஆகும்.

2006ம் ஆண்டு போர் உக்கிரம் பெற்றிருந்த நேரம் இலங்கை  கடற்படையினரின் செயல் வீச்சைக் குறைக்க வேண்டிய தேவை புலிகளுக்கு எழுந்தது. அதன் தொடர்ச்சியாக கடலில் மட்டுமல்லாது தரையிலும் வைத்து அழிக்க வேண்டிய தேவை புலிகளுக்கு எழுந்ததன் எதிரொலியே இந்தத் தாக்குதல் மற்றும் காலித்துறைமுக தாக்குதலுமாகும்.

கடற்படையின் செயல்வீச்சை நிறுத்த புலிகளின் உளவுத்துறையினர் முழுவீச்சில் களமிறக்கப்பட்டனர். அதன் மூலம் திருகோணமலையில் இருந்து விடுமுறைக்குச் சென்று வரும் கடற்படையினர் இலக்கு வைக்கப்பட்டனர். அதற்கான தகவல்கள் திரட்டப்பட்டன. மிகவும் சாதகமான இலக்கு. அவர்கள் பயணத்தின் போது இடையில் மதியம் உணவருந்தி ஓய்வெடுத்த பின் மீண்டும் பயணப்படுவதை உளவுப்புலிகள் குறிப்பு எடுத்துக் கொண்டனர்.


ஆனால், அதில் இருந்த பெரிய ஓட்டை தினமும் அவர்கள் ஒரே இடத்தில் தரித்து நின்று ஓய்வு எடுப்பதில்லை. பாதுகாப்புக் காரணங்களுக்காக ஓய்வெடுக்கும் இடம் அடிக்கடி மாறும். எது ஓய்வு எடுக்கும் பகுதியென பயணமாவதற்கு முதல்நாள் தான் திருமலை கடற்படைத்தள, கடற்படைத்தளபதி (கிழக்கு கட்டளைப்பீடம்) முடிவெடுப்பார். பின்னரே பயணப்படுவோரின் பாதுக்கப்பு அதிகாரிக்கு தெரியப்படுத்தப்படும்.

ஆனால், இந்தத் தகவல் தாக்குதலாளிகளுக்கு எப்படித்தெரியும் என்பதுதான் சிங்கள அரசுக்குப் புரியாத புதிராக இன்றுவரையும் இருக்கும் என்று நம்புகின்றேன். ஆரம்பத்தில் கரும்புலி அணியொன்றின் மூலம் தாக்கி அழிக்க யோசிக்கப்பட்டது. ஆரம்பத்திலேயே அதை நிராகரித்த தலைவர் மாற்று திட்டத்தைப்பற்றி கூறிச் செயற்படுத்த உத்திரவிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து புலனாய்வு செயல்பாடும் வேகம் பெற்றது. இந்த தாக்குதலுக்கு இரண்டு கரும்புலிகள் தெரிவு செய்யப்பட்டனர். ஒருவர் மிகச்சிறந்த சாரதியும், மற்றையவர் சரளமாக சிங்களம் பேசுபவராக தெரிவு செய்யப்பட்டனர். அடுத்த கட்டமாக அவர்களுக்கான பயிற்சி நிறைவு செய்தபின் இலக்கு நோக்கி அவர்கள் நகர்த்தப்பட்டனர்.

அவர்களுக்கான வெடிமருந்து லொறி தம்புள்ள பிரதேசத்தில் (தம்புள்ளவில்தான் இலங்கையின் மிகப் பெரிய மரக்கறி சந்தை உள்ளது. அங்கு தினமும் ஆயிரக்கணக்கில் லொறிகள் வந்து போகும், அதனால் குண்டு நிரப்பிய லொறியை இலகுவில் மறைக்க முடியும்) இவர்களுக்காகக் காத்திருந்தது. புலிகள் தரப்பில் எல்லாம் கச்சிதமாக திட்டமிடப்பட்டு முழு தயார்படுத்தலில் சிங்கள கடற்படையை எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இது எதையும் அறியாத சிங்கள கடற்படையினர் தங்கள் விடுமுறையை கொண்டாட ஆயத்தமாகி 16/10/2006 அன்று திங்கட்கிழமை கொழும்பு நோக்கி தங்கள் பயணத்தை தொடர்ந்தனர். பாதுகாப்பு காரணக்களுக்காக விடுப்பில் செல்லும் படையினரை ஒன்றாக சேர்த்து பல பஸ் வண்டிகளில் தொடரணியாகவே சென்று வருவது வழமை.

இவர்கள் பயணத்தை ஆரம்பித்த சில நிமிடங்களில் இவர்களது தரிப்பிடம் புலிகள் அறிந்து விட்டனர். இன்னொரு பக்கமாக இவர்களுக்காக, இவர்கள் போய், வரும் பாதையில் காத்திருந்த உளவுப்புலி வீரரால் இவர்களது பயணம் பற்றி இந்த தாக்குதலை நெறிப்படுத்திய கட்டளை அதிகாரிக்கு தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தாக்குதலுக்கான செயற்பாடும் வேகம் பெற்றது.

கொழும்பிலிருந்து சுமார் 150 மைல் தொலைவில் உள்ள ஹபரண, திகம்ப சந்திக்கு அருகில் பிரதான வீதியிலிருந்து ஒதுக்குப் புறம் ஒன்றே அன்றைய ஓய்வுக்கான இடமாக கடற்படை அதிகாரியால் தெரிவு செய்யப்பட்டிருந்தது. இது வழமையாக நின்று போகும் இடம்தான். அதன்படி திருகோணமலையில் இருந்து வந்த தொடரணியின் 15 பஸ்களில் வந்த 600க்கு மேற்பட்ட கடற்படையினர் ஓய்வுக்காக இறங்கி வேறு பஸ்களில் வந்த தமது சகாக்களுடன் குவியல், குவியலாக கதைத்துக் கொண்டிருந்த போது, பார ஊர்தி ஒன்று இவர்கள் நிற்கும் பிரதேசத்தினுள் நுழைந்தது.

அந்த ஊர்தியில் இருந்த ஒருவர் சிங்களத்தில் பெரிய சத்தமாக "பாதையை விட்டு விலகி வழி விடும்படியும், இவர்களுக்கான குளிர்பானம் கொண்டு வந்திருப்பதாகவும் கூறினார்". அதை நம்பிய சிங்கள கடற்படையினர் இவர்களுக்கு வழிவிட்டு, குளிர்பானாம் வாங்குவதற்கு குவியலாக லொறியை (பார ஊர்தியை) நெருங்கிய போது இவர்களும், எல்லா பஸ் வண்டிகளும் தரித்திருந்த இடத்தை நெருங்கியதும், படையினரும் கிட்ட நெருங்கவும் நேரம் சரியாக இருந்தமையால் குண்டை வெடிக்க வைத்தனர் அந்த தேசப் புயல்கள்.

ஒரு கனம் பூமியே அதிர்ந்தது.!! அந்த இடம் முழுவதும் பெரும் புகை மூட்டம் சூழ்ந்தது. எங்கும் மரண ஓலம் 200க்கு மேற்பட்ட சிங்களக் ககடற்படையினர் கொல்லப்பட்டும், 200க்கு மேற்பட்டோர் மீண்டும் பணிக்குத் திரும்ப முடியாத அளவுக்கு சிதைந்து போயிருந்தனர். அதுவரை தமிழர் தலைகளில் குண்டைப் போட்ட சிங்கள கடற்படை மீது அன்று புலிகள் இடியைப் போட்டனர்.! 

தினமும் கடலில் வைத்து எம் மக்களை கொன்று கடலில் மிதக்க விட்டவர்களை,  புலிகள் இரத்தத்தில் மிதக்க வைத்தனர்.!! சிங்களம் தம் படையினரைக் கூட்டி அள்ளினர் அன்று. இங்கு தமிழர் கூடிக் களித்தனர். 

ஆசியாவிலேயே முதல் முறையாக, ஒரே தாக்குதலில் பெரும் தொகையில் கடற்படையினரைக் கொன்று புலிகள் புதிய சரித்திரம் ஒன்றை அன்று படைத்தனர்.!!

- நிமிர்வுடன் ஈழத்து துரோணர்.
« PREV
NEXT »

No comments