Latest News

July 27, 2015

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் காலமானார்!
by Unknown - 0

தமிழகத்தின் தெற்கே இராமேஸ்வரத்தில் 1931 இல் பிறந்த அவர் இந்தியாவின் பலஸ்டிக் ஏவுகணை திட்டத்தின் வழிகாட்டியாகவும் திகழ்ந்தார்.

இந்தியாவின் அணுத்திட்டத்தில் இவர் ஆற்றிய பங்களிப்புக்காக இவருக்கு பாரத ரத்னா விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

2002இல் இந்திய குடியரசுத் தலைவராக அப்போதைய ஆளும் கட்சியாக இருந்த பாரதிய ஜனதாக் கட்சியினாலும் மற்றும் எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸினாலும் கூட்டாக நியமிக்கப்பட்ட அப்துல்கலாம் அவர்கள், 5 ஆண்டுகள் அந்த பதவியில் இருந்தார்.

இந்தியாவின் வடகிழக்கில் உள்ள சில்லோங்கில் நிகழ்வு ஒன்றுக்காக சென்றிருந்த அப்துல் கலாம் அவர்களுக்கு அங்கு திடீரென சுகவீனம் ஏற்படவே அவர் அங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கல்வி நிறுவனம் ஒன்றில் உரையாற்றிக்கொண்டிருந்தபோது அவர் மயங்கி விழுந்ததாக கூறப்படுகின்றது.

திருமணம் செய்யாமல் கடைசிவரை வாழ்ந்த அப்துல் கலாம் அவர்களின் மறைவு குறித்து பல முன்னணி அரசியல்வாதிகளும், தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
« PREV
NEXT »

No comments