Latest News

July 25, 2015

முற்போக்கு மாற்றங்களை தமிழ் மக்கள் உறுதி செய்ய வேண்டும்- GTF
by admin - 0

அண்மையில் நாட்டில் ஏற்பட்ட முற்போக்கு மாற்றங்களை உறுதி செய்யக் கூடிய வகையில் மக்கள் வாக்களிக்க வேண்டுமென க்ளோபல் தமிழ் போராம் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை வாழ் தமிழர்கள் மற்றும் இலங்கை வாழ் மக்களிடம் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் மிகவும் நிதானமான முறையில் வாக்களிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வாக்களிக்க வேண்டிய கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் தொடர்பில் வாக்காளர்கள் மிகுந்த நிதானத்தை பின்பற்ற வேண்டியது அவசியமானது என தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் இலங்கை அரசியல் வரலாற்றில் ஓர் திருப்பு முனையாக அமைந்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ளது.


ஜனநாயக விரோத, ஊழல் மோசடிகளில் மேற்கொண்ட, எதேச்சாதிகார அரசாங்கத்தை மக்கள் தோல்வியடையச் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இந்த மாற்றத்தை தக்க வைத்துக்கொள்ளும் வகையில் மக்கள் தீர்மானங்களை எடுக்க வேண்டியது இன்றியமையாதது என சுட்டிக்காட்டியுள்ளது.

ஜனவரி மாத தேர்தல் வெற்றியின் ஊடாக நிலைநாட்டப்பட்ட ஜனநாயகத்தை மேலும் உறுதிபடச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என தெரிவித்துள்ளது.

தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண அனைத்து தரப்பினரதும் பங்களிப்பு அவசியமானது என க்ளோபல் தமிழ் போராம் அமைப்பு தெரிவித்துள்ளது.
« PREV
NEXT »

No comments