Latest News

July 28, 2015

போர் குற்றங்களுக்காக முன்னாள் அதிபர் கடாபியின் மகன் அல் இஸ்லாமுக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதிப்பு!
by Unknown - 0

லிபியாவின் 2011 புரட்சியுடன் சம்பந்தப்பட்ட போர் குற்றங்களுக்காக அந்த நாட்டின் முன்னாள் அதிபர் மும்மர் கடாபியின் மகன் சயிஃப் அல் இஸ்லாமுக்கு நீதிமன்றம் ஒன்று மரண தண்டனை விதித்துள்ளது.

மேலும் எட்டு பேருக்கும் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

புரட்சிக் காலத்தில் போராட்டங்களை நசுக்க முயன்றதாக கேணல் கடாபி அவர்களின் நெருங்கிய சகாக்கள் பலருக்கும் இவர்களுடன் சேர்ந்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

சயிஃப் அல் இஸ்லாம் நீதிமன்றத்துக்கு சமூகமளிக்கவில்லை, வீடியோ தொடர்பு மூலம் அவர் சாட்சியமளித்தார்.

முன்னாள் கிளர்ச்சிக்குழு ஒன்றினால் ஷிந்தான் நகரில் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவரை விடுவிக்க அவர்கள் மறுத்து விட்டனர்.
« PREV
NEXT »

No comments