Latest News

July 22, 2015

அமைதியான தேர்தலை நடத்த கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் - யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி
by admin - 0

அமைதியான தேர்தலை நடத்த
கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்
- யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி-
 
அமைதியானதும், சுதந்திரமானதுமான தேர்தல் நடைபெறுவதற்கு அரசியல் கட்சிகள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எவ்.யூ.வூட்லர் கோரியுள்ளார்.
 
யாழ்.மாவட்டத்தில் தேர்தலை எதிர்கொள்ளவுள்ள கட்சிகளின் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்களுக்கான கூட்டம் ஒன்றை நாளை வியாழக்கிழமை யாழ்.பொலிஸ் நிலையம் ஒழுங்கமைத்திருக்கின்றது. இந்தக் கூட்டத்தில் கட்சிகளின் தேர்தல் நடவடிக்கைகள் எவ் வாறு அமையவேண்டும் என்பது தொடர்பில் விளக்கமளிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
 
இதன்பின்னர் சட்டத்தை மீறுவோர் யாராக இருந்தாலும் கைதுசெய்யப்படுவர் எனவும் அவர் தெரிவித்தார்.
 
பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில் கட்சிகள் மற்றும் வேட்பா ளர்கள் தங்கள் பிரச்சாரங்களை மேற்கொள்ளவேண்டும். 
 
குறிப்பாக 1981ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் சட்டத்திற்கு அமைவாக பிரசுரங்கள் ஒட்டுவது, பதாகைகள் வைப்பது, பாரிய வாகன ஊர்வலங்கள் மற்றும் மக்கள் ஊர்வலங்களை நடத்துவது, வீதிகளில் நின்று துண்டுப் பிரசுரங்கள் விநியோகிப்பது, மற்றும் பாரிய சத்தங்களை எழுப்பி ஒலிபெருக்கிகளை பாவித்து பிரசாரம் செய்வது போன்றன தடைசெய்யப்பட்டுள்ளன.
 
மேலும் குறிப்பாக மக்களுடை வீடுகளுக்குச் சென்று பிரசாரம் மேற்கொள்வது தொடர்பாக 1981ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் சட்டம் பிரிவு ஒன்றின் 75ம் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு வீடுகளுக்கு சென்று பிரசாரம் செய்யும்போது வேட்பாளர்கள் எவரும் செல்ல முடியாது. ஆனால் கட்சியின் ஆதரவாளர்கள் செல்லலாம். அவ்வாறு செல்பவர்கள் மக்களுக்கு இடையூறு விளைவிக்கவோ, தங்கள் எண்ணங்களை மக்களுடைய விருப்பிற்கு மாறாக திணிக்கவோ கூடாது. 
 
இந்த சட்ட வரம்புகளை மீறினால் யாராக இருந்தாலும் சட்டத்தினால் தண்டிக்கப்படுவார்கள். கூடுதலான வரையில் ஊடகங்கள் வாயிலாக வேட்பாளர்கள் தங்கள் கருத்துக்களை மற்றும் விளம்பரங்களை கொண்டுவருவது பொருத்தமானதாக இருக்கும் எனவும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

மேலும் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளுக்காக தயார்ப்படுத்தப்பட்டுள்ளார்கள். 11 நடமாடும் சேவைகள் நடத்தப்படுகின்றன. மேலும் விசேட தகவல் மத்திய நிலையம் அi மக்கப்பட்டுள்ளது. பொலிஸார் கடமையை சரியாகச் செய்வார்கள். 
 
பொதுமக்கள் எழுத்து மூலமாகவோ, வாய்மூலமாகவே தேர்தல் முறைகேடுகள் தொடர்பான தங்கள் முறைப்பாடுகளை பொலிஸாருக்கு தெரியப்படுத்தலாம் எனவுமு; வூட்லர் தெரிவித்தார்.
« PREV
NEXT »

No comments