Latest News

July 24, 2015

கிளிநொச்சி மாவட்ட சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் குடும்பங்களை சந்தித்தார் - அமைச்சர் டெனிஸ்வரன்...
by admin - 0

ஏற்க்கனவே அறிவிக்கப்பட்டதன் பிரகாரம் 24-07-2015 வெள்ளி காலை 4:00 மணியளவில் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில், கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அரசியல் கைதிகளின், கிராம அபிவிருத்தி திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட குடும்பங்களை சந்தித்து அவர்களது வாழ்வாதாரம் தொடர்பாகவும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

இவ்விசேட சந்திப்பில் வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களும் அமைச்சின் செயலாளர் திரு.எஸ்.சத்தியசீலன் அவர்களும் கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் திரு.ஜே.ஜே.சி.பெலிசியன் ஆகியோர் கலந்து மக்களுடன் கலந்துரையாடினர்.

இதன்போது அமைச்சர் தனது உரையில் இப்போது நாம் இக்கைதிகளின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை ஒரு நிலைக்கு கொண்டு வருவோம் எனவும், எதிர்வரும் தேர்தலின் பின்னர் இவ்வாறான கைதிகளது விடுதலை தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாஉவொம் எனவும் தெரிவித்ததோடு, இவ்வாறான வட மாகாணம் முழுவதும் உள்ள அனைத்து பதிவுசெய்யப்பட்ட குடும்பங்களுக்கும் தலா ஐம்பதுனாயிரம் ரூபா 50,000/= வீதம் வழங்கவுள்ளதாகவும், ஏற்க்கனவே மூன்று தடவைகள் பதிவதற்கான கால நீடிப்பு வழங்கியும் இதுவரை பதிவு செய்யாமல் இருக்கும் இவ்வாறான அரசியல் கைதிகளின் குடும்பங்கள் விரைவாக தமது பதிவுகளை தங்கள் பகுதி மாதர்/கிராம அபிவிருத்தி சங்கங்கள் மூலமாகவோ அல்லது கிராம அபிவிருத்தி திணைக்களம் ஊடாகவோ அல்லது எனது அமைச்சின் செயலாளர் அலுவலகம் ஊடாகவோ வரும் பத்து நாட்களுக்குள் விரைவாக பதிவு செய்து இத்திட்டத்தினை பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்ததோடு. அடுத்த கட்டமாக இத்திட்டத்தின் கீழ் வருகின்ற புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் மற்றும் பிள்ளைகளை இழந்தவர்களின் பதிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கான செயற்றிட்டம் விரைவில் நடைமுறைப் படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
« PREV
NEXT »

No comments