Latest News

July 07, 2015

பருத்தித்துறை மத்தியஸ்தர்சபைத் தலைவர் நடராஜா குணசீலன் மாணவிகளை வேட்டையாடி கைதானார்
by admin - 0

பருத்திதுறை மத்தியஸ்தர்சபைத் தலைவரும் பிரபல பாடசாலையின் முன்னாள் உப அதிபருமான நடராஜா குணசீலன் (புலிக்குட்டி என்று அழைக்கப்படுபவர்)

பாடசாலை மாணவிகள் 5 பேரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை எதிர்வரும் 17 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதிமன்ற நீதிவான் ம.கணேசராசா உத்தரவிட்டுள்ளார். 5 இற்கும் மேற்பட்ட பாடசாலை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என பருத்தித்துறை பொலிஸாரால் குற்றச்சாட்டப்பட்டு குணசீலன் இன்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். இதன்போது, பாதிக்கப்பட்டவர்களுக்காக முன்னிலையான சட்டத்தரணி யோகநந்தினி , இவ்வாறான சம்பவத்தின் மூலம் மேலும் வித்தியாக்கள் உருவாகாமல் தடுப்பதற்கு சந்தேகநபரை விளக்கமறியல் வைப்பது அவசியம் என வாதிட்டார். சந்தேகநபரை பிணையில் விடுமாறு அவரது சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கோரினார். எனினும் பிணை மனு நிராகரிக்கப்பட்டு சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

வீட்டில் வைத்து ஆங்கிலம் படிப்பித்த குணசீலன் மாணவிகளுக்கு சமச்சீர் என்றால் என்ன என்று விளங்க வைப்பதற்காக அவர்களைப் படுக்க வைத்து அவர்களை பாலியல்ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.


பாலியல் துர்ப்பிரயோகம் செய்து கைதுசெய்யப்பட்டதை
அடுத்து குணசீலன் பல வருடங்களாக நிகழ்த்திய பாலியல் குற்றங்கள் அம்பலத்திற்கு வருகிறது. 

Hartley பழைய மாணவரும் எழுத்தாளரும் சமுகநீதிப் போராளியுமான ஜீவமுரளி(ஜேர்மனி) ன் 
வாக்குமுலம் பின்வருவது.

"புலிக்குட்டியின் பாலியல் துஸ்பிரயோகங்கள் பற்றிய செய்தி எங்களுக்குத்தான் புதியதாக இருக்கின்றது! ஆனால் இதை அவர் பலவருடங்களாக செய்து வந்திருக்கின்றார் என்பதை இப்பொழுது அறியமுடிகின்றது. 

2006 ல் இருந்து 2010 வரைக்கும் என் தங்கை பருத்தித்துறை மெதடிஸ்த கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றியவர். அவர் புலிக் கு ட் டி பற்றி சொன்ன தகவல்கள் ஆச்சரியமளிக்கின்றன. 

புலிக்குட்டி காட்லிக் கல்லூரியிலிருந்து இழைப்பாறிய பின் ஆசிரியர்கள் பற்றாக்குறை காரணமாக மெதடிஸ்த பெண்கள் பாடசாலையில் தொடர்ந்து பணியாற்றியிருக்கின்றார். 

அவர் வீட்டில் ரியுசன் சொல்லிக் கொடுப்பதை வழமையாகக் கொண்டிருந்தார். 6வது வகுப்பிலிருந்து 10 வது வகுப்பு மாணவர்கள் வரைகும் கல்வி கற்பித்திருக்கின்றார். 

ரியுசன் முறை மூலம் கல்வி கற்ற மாணவிகள் சிலர் அப்பொழுதே புலிக்குட்டியின் துஸ்பிரயோகளுக்கு ஆளாக்கப்பட்டதாகவும் அதை தன்னிடம் தெரிவித்ததாகவும் என் தங்கை கூறினார். 

ரியுசன் முடிந்த பின்பு மாணவிகளில் ஒருவரை நின்று செல்லமாறு வற்புறுத்தி சேட்டைகள் செய்திருக்கின்றார். இதுபற்றி அன்றைய மெதடிஸ்த கல்லூரியின் அதிபரிடம் முறையிட்டபோது புலிக்குட்டி மாணவிகளை பேரப்பிள்ளைகள் போல் பாவிப்பதாக சொல்லி அலட்சியப்படுத்தியிருக்கின்றார். அதன்பின் அவர் உதவி அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சென்று முறையிட்டிருக்கின்றார் . 
பின்பு புலிக்குட்டி எச்சரிக்கப்பட்டிருக்கின்றார்.

 இப்பொழுது நடக்கும் வழக்கில் புலிக்குட்டிக்கு எதிராக வழக்காடும் சட்டத்தரணி யோகநந்தினி மெதடித்த கல்லூரியின் பழைய மாணவி. புலிக்குட்டி போன்றவர்கள் செய்து முடித்த அனைத்து பாலியல் துஸ்பிரயோகங்களும் இனியாவது வெளிவரவேண்டும்.
சட்டத்தரணி யோகநந்தினியை சிதைக்கப்பட்ட ஒரு சிவில் சமுகத்திலிருந்து மீண்டெழும் ஒரு தொடக்கப்புள்ளியாகவும் குறியீடாகவும் கொள்வோம்"

 
« PREV
NEXT »

No comments