Latest News

July 25, 2015

16 வயதிலே போராட சென்ற பெண் இன்று அரசியலில் -யார் இவர்?
by admin - 0

கோகிலவாணி  ஆயுதப் போராட்டத்தில் நேரடியாக
பங்கெடுத்தவர். 16 வயதில் போராட்டத்தில் இணைந்து கொண்டவர். ஐக்கிய அமெரிக்கா நாடுகளின் சர்வதேச வருகையாளர் தலைமைத்துவ செயற்திட்டதில் (International Visitor Leadership Programme) பங்குபற்றியவர்.

2014 நவம்பரில் இருந்து USAIDஇன் நிதி வசதியுடன் மீள் சுழற்சி காகித தொழிற்சாலை ஒன்றை அமைக்கும் பணியில் இணைந்து கொண்டுள்ளவர். அவர் அண்மையில் வழங்கிய நேர்காணலில் 

"கூட்டமைப்பு செய்து வருவது கால நீடிப்பு அரசியல். அரசியல் தீர்வு பற்றியோ வாழ்வு சுதந்திரத்தை பற்றியோ எந்தொவொரு திட்டமும் இல்லாதவர்கள். முன்னணி கொள்கையில் உறுதியாக இருக்கும் காரணத்தினாலேயே முன்னணியில் இணைந்து கொண்டேன்" என தெரிவித்த கோகிலவாணி வித்தியாதரன் பற்றி கேட்டபோது  "வித்தியாதரனின் அணியில் இருப்பவர்கள் பற்றி நான் தவறாக கூற மாட்டேன். 

அவர்களும் என்னைப் போல் ஆயுதம் தரித்து போராடியவர்கள். ஒரு காலத்தில் தலையில் வைத்து கொண்டாடப்பட்ட போராளிகள் அரசியலில் இருந்தும் சமூகத்தில் இருந்தும் மே 18க்குப் பின்னர் ஒதுக்கப்பட்டனர் என்பது உண்மை. அது தொடர்பில் போராளிகளுக்கு இருக்கும் கோபம் நியாயமானது. ஆனால் இவர்கள் எவ்வாறு வித்தியாதரனின் சுயநல அரசியல் தலைமைத்துவத்தை ஏற்றுக் கொண்டார்கள்? போராட்டம் தொடர்பான செய்திகளை வியாபரமாக்கியவர்கள் பின்னால் இவர்கள் எவ்வாறு சேர்ந்தார்கள் என்பது எனக்கு விளங்கவில்லை". 

பின்னர் சிறிதரன் பற்றி கேட்டபோது "சிறீதரன் நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் நான் மொழிபெயர்ப்பாளராக வேலை செய்தது உண்மை. குறிப்பிட்ட தனி நபர் ஒருவர் தொடர்பாக நான் கருத்துக் கூறவில்லை. ஆனால் தேர்தல் காலத்தில் மட்டும் தமிழ்த் தேசியம் பேசும் கட்சியோடு என்னால் அரசியல் செய்ய முடியாது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அப்படியான கட்சி இல்லை."
« PREV
NEXT »

No comments