Latest News

July 22, 2015

சர்வதேச விசாரணை கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் -தேர்தலுக்கு மட்டுமானகோரிக்கையாக இருக்ககூடாது
by admin - 0

தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்களுக்கும், அநீதிகளுக்கும் ஐ.நா விசாரணை அறிக்கை வேளியிட வேண்டும்.இனப்பிரச்சனைக்கு திர்வு கிடைக்க வேண்டும் வடகிழக்கு அபிவிருத்தி மேபடுத்த வேண்டும் உள்ளிட்ட மூன்றுபிரதான கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்படவுள்ளது.

ஏதிர்வரும் 25 ஆம் திகதி மருதனார்மடத்தில் நடபெறவுள்ள கூட்டமைப்பின் முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலேயே இதனை வெளியிட உள்ளதாக கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச் சந்திரன் தெரிவித்துள்ளார்.

துமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்தேர்தல் விஞஞாபனம் தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்து கட்சித் தலைவர்களினால் அது ஏற்றுக் கொள்ளப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சனைகள் முதல் இனப்பிரச்சனைக்கான தீர்வு வரை அனைத்தும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இனப்பிரச்சனைக்கான தீரவு இரானுவவெளியேற்றம் சர்வதேச விசாரணை உள்ளிட்ட விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஆத்தோடு வடக்கு கிழக்கு முழுவதும் மழுமையான அபிவிருத்தி மேற்கொள்ளப்பட வேண்டும். பலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக தரமுயர்த்தப்பட வேண்டும். 

மேலும் யுத்தத்திற்கு முன்னர் இல்லாதிருந்த போதை வஸ்து யுத்தம் முடிவடைந்த பின்னர் அதிகரித்துள்ள நிலையில் இதனை கட்டுப்படுத்த வேண்டும். நுpலத்தடி நீர் மாசால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களு;ககு குடிநீர் பிரச்சனைக்கு தீரு:வு ஏற்படுத்த வேண்டும் உள்’ளிட்ட பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இதனை எதிர்வரும் 25 ஆம் தகதி கட்சித் தலைவர் தலைமையில் யாழ்ப்பானம் மருதனார் மடத்தில் நடைபெறவுள்ள கட்சியின் முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் வெளியிடவுள்ளொம். இதனைத் தொடர்ந்து பல இடங்களிலும் பரச்சாரக் கூட்டங்கள் நடைபெறவுள்ளன. இதன் போது மக்களுக்கு தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளிப்படுத்தி அதனை அவர்களுக்கு வழங்க உள்ளோம் என்றார்.
« PREV
NEXT »

No comments