Latest News

July 25, 2015

கூட்டமைப்பில் கடந்த காலங்களில் போட்டியிட்டவர்களே மீண்டும் மீண்டும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்-யாழ் ஆயர்
by admin - 0

கூட்டமைப்பில் கடந்த காலங்களில் போட்டியிட்டவர்களே மீண்டும் மீண்டும் தேர்தலில் போட்டியிடுகின்றனர் என்ற அபிப்பிராயம் மக்கள் மத்தியில் இருந்ததையும் யாழ் ஆயர் அவரை சந்தித்த கூட்டமைப்பினரிடம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் புதிய கட்சிகள் ,சுயேட்சைக் குழுக்கள் களமிறங்கியுள்ளதால் தமிழ் மக்களின் வாக்குகள் சிதைக்கப்படுமோ என்று கவலையாக தனக்கு இருக்கின்றதாக யாழ்.மறை மாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை கூட்டமைப்பினருடனான சந்திப்பில் தெரிவித்துள்ளார்.   

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்,மாவை சேனாதிராசா,எம்.ஏ சுமந்திரன் மற்றும் வடக்கு மாகாண சபை உறுப்பினர் இ.ஆனோல்ட்  ஆகியோர் யாழ்.மறை மாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகையை நேற்று மாலை சந்தித்து கலந்துரையாடினர்.   குறித்த சந்திப்பில் ஆயர் கருத்து தெரிவிக்கையில்,   தற்போதைய நிலையில் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் தமிழ் மக்களின் வாக்குகள் பிரிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சம் நிலவுவதாக குறிப்பிட்ட ஆயர்,புதிதாக களமிறங்கியுள்ள கட்சிகள்,சுயேட்சைக் குழுக்கள்  தமிழ் மக்களின் ஒற்றுமையை சிதைத்து விடும் நிலை காணப்படுவதை சுட்டிக்காட்டினார்.   

கூட்டமைப்பின் தலைமைக்கு எதிராகச் சிலரால் முன்னெகூட்டமைப்பினர்க்கப்படும் பரப்புரைகள் தொடர்பில் ஆயரிடம் சுட்டிக்காட்டிய போது அவ்வாறு அதனை முன்னெடுப்பவர்கள் பலமானவர்கள் இல்லை என்று ஆயர் பதிலளித்தார்.   மேலும் ஆயர் , தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களை விரைவாக அறிவூட்ட வேண்டும் என்றும் கூட்டமைப்பின் ஸ்திரத்தன்மையை பேணுவதற்கு கடுமையாக வேலை செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.   மேலும் தற்போதுள்ள ஆட்சி மாற்ற சூழ்நிலையை பயன்படுத்தி தமிழ் மக்களுக்கு விரைவில் தீர்வைப் பெற்றுக் கொடுக்க கூட்டமைப்பு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆயர் குறிப்பிட்டார்.   
« PREV
NEXT »

No comments