Latest News

July 26, 2015

க.பொ.த உயர்தர பரீட்சை-முன்னோடி வகுப்புக்கள், பயிற்சிகளுக்கு தடை விதிப்பு !
by Unknown - 0

2015 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உயர்தர பரீட்சைக்கான முன்னோடி பயிற்சி வகுப்புகள் , கருத்தரங்குகள், செயலமர்வுகள் என்பன எதிர்வற்றிற்கு எதிர்வரும் 29 ஆம் திகதி நள்ளிரவுடன் தடை செய்யப்பட்டுள்ளன என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளீயூ.எச்.எம்.ஜே. புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.    

இந்த தடை உத்தரவு செப்டம்பர் மாதம் 08 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என்றும் அவர்  தெரிவித்துள்ளார்.   அவர் மேலும் தெரிவிக்கையில்,   உயர்தர பரீட்சைக்கு தேவையான பயிற்சி புத்தகங்கள் விநியோகித்தல், சுவரொட்டிகளை காட்சிப்படுத்துதல், கையேடுகள் மற்றும் துண்டு பிரசுரங்களை விநியோகித்தல் என்பன தடை செய்யப்பட்டுள்ளன. 

 இதேவேளை, தடைசெய்யப்பட்ட காலத்தில்  இலத்திரனியல் அல்லது அச்சு ஊடகங்களினூடாகவும் உயர்தர பரீட்சைக்கு சார்பான விடயங்களை வெளியிடவும் தடைசெய்யப்பட்டுள்ளன.   தடை உத்தரவை மீறும் நபர்கள் அல்லது கல்வி நிறுவனங்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.   

அவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமாயின் அண்மித்த பொலிஸ் தலைமையகம் அல்லது கல்விப் பணிமனைகளில் முறைப்பாடு செய்யுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், 0112 784208 அல்லது 0112 784537 என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் பாடசாலை பரீட்சைகள் ஏற்பாடு மற்றும் பெறுபேறுகள் வெளியீட்டு பிரிவுக்கு அறியப்படுத்த முடியும்.   அத்துடன் 1911 என்ற இலக்கம் அல்லது 119 என்ற பொலிஸ் அவசர அழைப்புக்கும் அறியப்படுத்துமாறும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
« PREV
NEXT »

No comments