Latest News

July 26, 2015

பாகிஸ்தானுடனான 5 ஆவது ஒரு நாள் போட்டியில் இலங்கை அபார வெற்றி
by Unknown - 0

பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றது.

பாகிஸ்தான்– இலங்கை அணிகள் மோதிய 5வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹம்பன்டோடாவில் இன்று நடைபெற்றது.

பாகிஸ்தான் அணி ஏற்கனவே 3 போட்டியில் வென்று தொடரை கைப்பற்றி விட்டது. டெஸ்ட் தொடரையும் பாகிஸ்தான் அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.

இந்நிலையில் கடைசி ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

தொடக்க ஆட்டக்காரர்களாக டில்ஷான், குஷால் பெரேரா களமிறங்கினர். இருவரும் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர்.

டில்ஷான் பொறுமையாக விளையாடி வந்த நிலையில் ஓட்டமுறையில் வெளியேற்றப்பட்டார். அவர் 70 பந்துகளில் 63 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் அசத்தலாக ஆடிய சர்வதேச அரங்கில் 2வது சதம் அடித்தார்.

இவர் 109 பந்துகளில் 116 ஓட்டங்கள் (9 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்த நிலையில் இவரும் ஓட்டமுறையில் வெளியேற்றப்பட்டார்.

திரிமன்னே (30), சந்திமால் (29) நிதானமாக விளையாடி தங்கள் பங்கிற்கு ஓரளவு ஓட்டங்களை குவித்தனர்.

பின்னர் கடைசி நேரத்தில் ஜோடி சேர்ந்த அணித்தலைவர் மேத்யூஸ், சிறிவர்த்தன அதிரடியில் இறங்கினர்.

இவர்களின் அதிரடியால் 50 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 4 விக்கெட்டுக்கு 368 ஓட்டங்கள் குவித்தது.

அணித்தலைவர் மேத்யூஸ் 40 பந்துகளில் 70 ஓட்டங்கள் (8 பவுண்டரி, 2 சிக்சர்), சிறிவர்த்தன 26 பந்துகளில் 52 ஓட்டங்கள் (4 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதையடுத்து 369 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தானின் அசார் அலி, அகமது சேஷாத் ஆகியோர் களமிறங்கினர்.

சேஷாத் 18 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். சிறிது நேரத்தில் அசார் அலியும் 35 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் இணைந்த முகமது ஹபிஸ் மற்றும் சொயப் மாலிக் சிறிது நேரம் தாக்குபிடித்தாடினர். இந்நிலையில் ஹபிஸ் 37 ஓட்டங்களில் மேத்யூஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் பாகிஸ்தான் அணி 37.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 203 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

இதையடுத்து இலங்கை அணி 165 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இலங்கையின் சச்சித்திர சேனநாயக்கா 3 விக்கெட்களை கைப்பற்றினார். அந்த அணியின குஷால் பெரேரா ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.
« PREV
NEXT »

No comments