Latest News

July 23, 2015

பொது தேர்தலில் தபால் மூல வாக்களிப்பிற்காக யாழில் 179 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது
by admin - 0

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்ற பொது தேர்தலில் தபால் மூல வாக்களிப்பிற்காக 179 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் 30 இற்கு மேற்பட்ட வாக்களிப்பு நிலையங்கள் இங்கு நிலை கொண்டுள்ள படையினருக்கான அமைக்கப்பட்டுள்ளதாக யாழ்.உதவித் தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
 
மேலும் தபால்மூல வாக்களிப்பு தினங்களில் வாக்களிக்க தவறியவர்கள் எதிர்வரும் ஓகஸ் மாதம் 8 ஆம் திகதி சனிக்கிழமை யாழ்.மாவட்ட செயலகத்திற்கு நேரடியாக வந்து தமது வாக்குகளை பதிவு செய்யலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 
யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
 
இவ்விடையம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:-
 
நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் தபால் மூல வாக்களிப்பு செய்பவர்களுக்கான வாக்குச் சீட்டுக்கள் நாளை 24 ஆம் திகதி விநியோகிக்கப்படவுள்ளது. இதன்படி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி ஆசிரியர்களுக்கான தபார் மூல வாக்களிப்பும், 5 ஆம், 6 ஆம் திகதிகளில் ஏனைய திணைக்கள அலுவலகர்களுக்கான தபால் மூல வாக்களிப்பு நடைபெறும்.
 
இதற்கான ஏற்பாடுகள் தற்போது யாழ்.உதவித் தேர்தல் அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 
 
யாழ்ப்பாண்தில் மட்டும் 179 தபால் மூல வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் மேற்படி வாக்களிப்பு நிலையங்களில் யாழ்.மாவட்டத்தில் நிலை கொண்டுள்ள பொலிஸார், இராணுவம், கடற்படை, விமானப்படையினருக்காக 30 ற்கும் மேற்பட்ட தபால் மூல வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 
 
படையினருக்கான தபால்வாக்களிப்பு சீட்டுகள் அந்தந்த மாவட்டங்களில் இருந்து அனுப்பிவைக்கப்படும். இருப்பினும் யாழ்.தேர்தல் அலுவலகர்களே படையினருக்கு அமைக்கப்படும் தபால் மூல வாக்களிப்பு மையங்களில் கடமையில் இருப்பார்கள்.
 
இருப்பினும் படையினருக்கு அமைக்கப்பட் வாக்களிப்பு நிலையங்களின் தொகை உத்தியோக பூர்வமானது இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
« PREV
NEXT »

No comments