Latest News

June 10, 2015

சர்வதேச உளவுத்துறைகளுக்கு தண்ணி காட்டி கரையை அடைந்த புலிகளின் கப்பல் -ஈழத்து துரோணர்..
by admin - 1

ஈழ யுத்தம் இறுதி கட்டத்தில் இருந்தது.! புலிகள் கடலால் ஆயுதம் கொண்டு வருவதற்கு எடுத்த முயற்சிகள் சர்வதேச உளவுத்துறைகளின் முழு நேரடி உதவியுடன் சிங்கள கடல் படை சர்வதேச கடலில் வைத்து அழித்த பின் விமானம் மூலமாக ஆயுதங்கள் இறக்குவதையும் சர்வதேச உளவுபடைகள் தடுத்தமையும் பெரும் பின்னடைவை, புலிகளின் போராடும் படையணிகளுக்கு கொடுத்திருந்தது.



2008ம் ஆண்டின் இறுதியில் ஆகாய மார்க்கமான ஆயுத வளங்கள் தடை பட்டதும், மீண்டும் கடல் மார்க்கமாக புலிகளின் உளவுத்துறையினர் ஆயுதங்கள் கொண்டுவரும் புது முயற்சியை தலைவரின் ஆலோசனையின் பேரில் ஆரம்பித்தனர். இந்த நடவடிக்கையையும் நேரடியாக பொட்டம்மானே நெறிப்படுத்த ஆயத்தமானார்.


அப்போது அவர் அதுவரை ஆயுத வழங்கல் சறுக்கியதற்கான காரணங்களை தேடினார். அதில் அவர் இரண்டு விடையங்களை மிகவும் நுண்ணியமாக கருத்தில் எடுத்தார். ஒன்று தொலைத் தொடர்பு, மற்றையது முன்னைய ஆயுத கொள்முதலை செய்த கடல்புலிகளை இந்த நடவடிக்கையில் பயன்படுத்துவதில்லை என்பதே அது.


காரணம் இதில் சம்பந்தப் படுவோரை சர்வதேச உளவுத் துறைகள் கைது செய்யாமல் தமது 24மணிநேர கண்காணிப்பு வலையத்துக்குள் வைத்திருந்தே, புலிகளின் ஆயுத வழங்கல் நெட்வொர்க்கை அழிக்க முக்கிய காரணம். ஆக அவர்கள் போக்கில் போயே அவர்களுக்கு தண்ணி காட்ட அம்மானும் முடிவெடுத்து, சர்வதேச உளவில் ஈடுபட்டிருந்த புலிகள் சிலரை இந்த பணிக்காக மீண்டும் ஒருங்கிணைத்து களத்தில் இறக்கினார்.


நடவடிக்கையின் முதல் கட்டமாக தொலைத்தொடர்பு மையம் ஒன்றை சர்வதேச உளவுத் துறைகள் ஊகிக்க முடியாத இடத்தில் அதை அமைத்தார். ஆம் கனடாவில் அந்த மையம் அமைக்கப் பட்டது. அடுத்ததாக "18 சட்லைட் போன்கள்" கொள்முதல் செய்யப்பட்டது. வேறு,வேறு பெயர்களில் வேறு, வேறு இலக்கங்களில். இதில் 8போன்களை தொலைத்தொடர்பு மையத்தில் இருக்கும் படி செய்த பின், இரண்டாவது கட்டமாக மிகுதி 8 போன்களும் இந்தோநேசியாவிட்கு அனுப்பப் பட்டது.

அடுத்ததாக இதில் புலிகளுக்கு சொந்தமான கார்கோ கப்பல் ஒன்றை பயன்படுத்தாமல், பெரிய மீன்பிடி கப்பல் ஒன்றை லீஸ் செய்தார்கள் புலிகள். கப்பலை செலுத்துவதற்கு கடல் புலிகலின் மாலுமிகள் யாரையும் பயன்படுத்தாமல், இந்தோனேசியாவைச் சேர்ந்த மாலுமிகள் பணிக்கு அமர்த்தப் பட்டனர். 

இந்தோனேசியா மாலுமிகளுடன், பொட்டம்மானின் நம்பிக்கைக்குரிய, புலிகளின் உளவுப் பிரிவைச் சேர்ந்த "ஒரேயொரு நபர்" மட்டும் ஏறிக் கொண்டார். அவரிடம் அந்த 8சட்லைட் போனுடன், அவருடன் இருந்த ஒரு போனுமாக 9போன்களுடன் பயணத்திற்கு ஆயத்தமானார் அந்த போராளி.

அடுத்ததாக எந்த துறைமுகத்தில் வைத்தும் பொருட்கள் ஏற்ற படவில்லை. காரணம் துறைமுகம், விமானநிலையங்கள் போன்றவை எல்லா உளவுத் துறையினரின் கண்காணிப்பிலேயே எப்போதும் இருக்கும். இதனை உணர்ந்த புலிகள் தமது பொருட்களை துறைமுகத்தில் வைத்து ஏற்றாது கடலில் நிக்கும் போதே சிறு படகுகள் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக கடலில் வைத்தே ஏற்றினர்.

அந்த நேரத்தில் முன்னைய ஆயுத கொள்முதலை செய்த போராளிகளுக்கு இந்த நடவடிக்கை பற்றி கூறாமல்,ஆயுதம் வாங்க முயற்சி செய்யும் படி கூறப் பட்டது. அவர்களும் அதற்கான ஆயத்தங்கள் செய்யும் போது, சர்வதேச உளவுத் துறைகள் உசாரடைந்து இவர்களை சுற்றிவர, மறுவளத்தால் புலிகளின் உளவுத் துறையினர் தங்கள் வேலையை கச்சிதமாக செய்து முடித்து விட்டனர்.

இது ஒரு பரிச்சாத்த முயற்சி என்பதால் புலிகளின் உளவுத்துறைக்கு தேவையான பொருட்களும், மருந்துவகைகள் மற்றும் சிறிய அளவிலான ஆயுதங்களுடன்,கப்பல் நிரப்பப் பட்டதும், முல்லைத்தீவை நோக்கி பயணமானது. ஒரே செல்போன் தொடர்ச்சியாக ஒரே இடத்துக்கு பேசவில்லை என்பதால், வெளிநாட்டு உளவுத்துறைகள் எதுவும், உடனடியாக இவர்களது தொலைத் தொடர்புகளை ட்ராக் டவுன் செய்ய முடியவில்லை.

இதே நேரம் கப்பலில் இருந்த போராளி வன்னியுடன் எந்த தொடர்பையும் ஏற்படுத்தவில்லை. இவர் கனடாவில் இருந்த தொடர்பு நிலையத்துக்கு சொல்ல, அங்கிருந்து வன்னிக்கு தகவல் சொல்லப் பட்டது. அத்தோடு இந்த போன்களை இந்தோனேசிய மாலுமிகளும் பயன் படுத்த அனுமதித்தார் அந்த போராளி. இந்தோனேசிய மாலுமிகள். இந்தோனேசியாவில் உள்ள உறவினர்களுடன் பேசியது, ‘ஜாவானீஸ் மொழியில்".

இந்தோனேசிய, மலேசிய ரோந்துப் படகுகல் குறுக்கிடும் போது ரேடியோ தொடர்பு கொண்டது, அவர்களது ‘பாஷா இன்டோனேசியன்’ மொழியில். இது மலாய் மொழியின் சற்றே மாறிய வடிவம். கடற்படை அதிகாரிகலுக்கும் இந்த மொழி தெரியும். இப்படியே அந்த கப்பலின் கட்டளை அதிகாரியாக செயல் பட்ட புலிகளின் உளவுத் துறைப் போராளியின் வழி நடத்தலில், கப்பல் முல்லைத்தீவை நோக்கி விரைந்தது.

இப்படி பல திசை திருப்பல்களுடன் சர்வதேச,சிங்கள, இந்திய உளவுத்துறைகளுக்கு தண்ணி காட்டி, புலிகளின் கப்பல், முல்லைத் தீவை, யுத்தம் முடிவதற்கு 3 மாதங்களுக்கு முன், பிப்ரவரி மாதத்தின் நடுப்பகுதியில் (2009) சென்றடைந்தது. அங்கிருந்து கடல் புலிகள் இந்திய, இலங்கை கடல்படையின் கண்ணில் மண்ணைத் தூவி பொருட்களை பத்திரமாக கரை சேர்த்தனர்.

2006 சண்டை ஆரம்பமான பின் புலிகளுக்கு போய்ச் சேர்ந்த இரண்டாவதும்,கடைசி கப்பலும் இது தான். (இதற்கு முன் ஒரு கப்பலில் மட்டும் 25தொன் ஆயுதங்கள் கரைக்கு போய்ச் சேர்ந்தது) மிகவும் நேர்த்தியாக திட்டமிட்டு எந்தவித பிசிறும் இல்லாமல் இந்த நடவடிக்கையை செய்து முடித்தனர் புலிகளின் வெளிநாட்டு உளவுத்துறையினர்.

மீண்டும் இதே போல அடுத்த முயற்சியில் ஈடுபட ஆரம்பித்த போது யுத்தமும் இறுதிக் கட்டத்தை அடைந்திருந்தது. ஒழுங்குகள் மேற்கொள்ளும் போது யுத்தம் நிறைவு பெற்று விட்டது. வன்னியில் இதோடு சம்பந்த பட்டிருந்த போராளியும் உயிருடன் பிடி பட்டமையால் எதிரியால் இந்த நடவடிக்கை பற்றி அறிய முடிந்தது.
அன்பு நண்பர்களே இதை பார்க்கும் போது சிலருக்கு இது ஒரு இலகுவான நடவடிக்கை போல தெரியலாம் உண்மையில் அது அப்படி இருக்கவில்லை. 

எமது நேரடி எதிரியுடன் மட்டும் போராடவில்லை மறைப்பில் இருந்த பல நாட்டு உளவுத்துறைகளுக்கும் தண்ணி காட்டியே, இந்த வெற்றியை தமிழர் சாதித்தனர். ஒன்றை ஆணித்தரமாக சொல்ல முடியும் தமிழனுக்கு என்று ஒரு நாடு அமைந்திருந்தால், எமது நாடும் இஸ்ரவேலை போல பெயர் சொல்லும் படியாக நிச்சயம் இருந்திருக்கும்.!

« PREV
NEXT »