Latest News

June 30, 2015

கொழும்பில் சிங்களக் கடல்படை தளபதியை அழித்த..! * கரும்புலி வீரனும்,CM-125 மோர்ட்டார் சைக்கிளும்..! -ஈழத்து துரோணர்..!!!
by admin - 0

கொழும்பில் சிங்களக் கடற்படைத் தளபதியை அழித்த... கரும்புலி வீரனும், CM-125 மோர்ட்டார் சைக்கிளும்..!
-------------------------------------------------------------------------

இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கி உக்கிரம் பெற்றிருந்த காலமது. இராணுவத்தின் முன்னேற்ற முயற்சி முறியடிப்பும், தமிழர் சேனையின் வலிந்த தாக்குதலுமாக, தமிழர் நிலம் எங்கும் அதிர்ந்து கொண்டிருந்த காலம்.

ஆனையிறவு படை முகாம் மீதான தாக்குதலின் பின் (1991) எமது பின்னடைவுக்கான காரணங்கள் தலைவரால் ஆராயப்பட்ட போது, சிங்கள கடற்படையின் அசுர வளர்ச்சியே காரணம் என கண்டறியப் பட்டது, தமிழர் சேனையின் கடல் பலமும் அதிகரிக்கபட வேண்டியதை உணர்ந்த தலைவர், புலிகளின் பெரும் வளங்களை ஒன்றிணைத்து தளபதி சூசை தலைமையில் தமிழர் கடற்படை படிப்படியாக கட்டியமைக்கப்பட்டது.

எந்த விடையங்களையும் தூர நோக்கில் சிந்திக்கும் எம் தேசிய தலைவர் சிங்கள கடற்படையின் செயல் வீச்சை குறைக்கவும், புலிகளின் வளர்ச்சியை அதிகப் படுத்தவும் உத்தேசித்து, சமகாலத்தில் புலிகளின் உளவுத்துறைக்குச் சில கட்டளைகளை வழங்கினார்.

சிங்கள கடற்படையின் அதி உச்ச தலைமைத் தளபதி அட்மிரல். கிளான்சி பெர்னாண்டோ மீது புலிகள் இலக்கு வைத்தனர். அதன் தொடர்ச்சியாக தமது கண்காணிப்பு வளையத்தினுள் கொண்டு வந்தனர். சிங்களத்தின் உச்ச தளபதி என்பதால் பாதுகாப்பும் மிகவும் பலமாகவே இருந்தது. முன்னும், பின்னும் அதி சிறப்பு பயிற்சி பெற்ற கொமாண்டோக்களின் பாதுகாப்பில் வலம் வந்தமையால் இலக்கை புலிகள் இனம் கானவும், அனுகவுமே சில மாதங்கள் சென்றன.

தினமும் காலை 8.30 மணிக்கு Flagstaff Street Galle இல் அமைந்திருந்த தலைமை அலுவலகத்துக்கு குறித்த நேரத்தில் சென்று, மாலையில் திரும்பும் நேரம் குறிப்பிட்ட நேரமாக இல்லாத படியால், புலிகள் தாக்குதலுக்கான நேரத்தை காலையில் தெரிவு செய்தனர். தொடர் கண்காணிப்பின் ஊடாக இலக்கை அழிக்க வேண்டிய இடத்தையும் தெரிவு செய்த பின் தலைமைக்கு தெரியப்படுத்தினர்.

அதுவரை இலக்கை அழிப்பதற்கு வாகனங்களை பாவித்து வந்த நிலையில், சில நடைமுறை சிக்கல் காரணமாக வாகனங்களை தவிர்த்து மோர்ட்டார் சைக்கிளில் குண்டை பொருத்தி தாக்குதலை மேற்கொள்வதற்கு முடிவெடுத்தனர். இந்த தாக்குதலை, கொழும்பில் இருந்து நெறிப்படுத்திய புலிகளின் உளவு அதிகாரி போட்ட திட்டம் தலைமையால் ஏற்கப்பட்டதும் அதற்கான வேலை யாழ்பாணத்தில் வேகம் பெற்றது.

அந்த நேரத்தில் இந்தப் பணியை செய்வதற்கு இது போல சைக்கிளில் குண்டை பொருத்தி வெடிக்க வைத்து பல இந்திய இராணுவத்தினரை கொன்ற ஒரு போராளியிடம் அம்மான் பொறுப்பை ஒப்படைத்திருந்தார். அதன் படி அந்த நேரத்தில் எதிரி சந்தேகிக்க கூடாதென்பதற்காக, கொழும்பில் அதிகமாக பாவனையில் இருந்த CM-125 என்னும் மோட்டார் சைக்கிளை புலிகள் தெரிவு செய்தனர்.

கோப்பாயில் அமைந்திருந்த இரகசிய முகாம் ஒன்றில் வைத்து குண்டை பொருத்தினர். அந்த தாக்குதலை செய்த போராளியும் அது போன்ற மோட்டார் சைக்கிளில் யாழ் நகரில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். பயிற்சியின் நிறைவின் பின் அந்த போராளி இலக்கு நோக்கி நகர்த்தப் பட்டார். அவரை தொடர்ந்து குண்டு பொருத்திய வண்டியும் இலக்கு நோக்கி நகர்ந்தது. இலக்கை தாக்கவேண்டிய நாளும் குறிக்கப்பட்டது.

குறித்த கரும்புலிப் போராளியும் அங்கிருந்தபடி தினமும் பயிற்சியில் ஈடுபட்டு தன்னை தயார் படுத்தினான். தனது இலக்கு எந்தவிதத்திலும் தவறக்கூடாது என்பதில் மிகவும் கவனாமாக இருந்தான். அந்த நாளும் வந்தது.! இந்தத் தாக்குதலுக்கான கட்டளை அதிகாரியும் அவரது உதவியாளரும் குண்டைச் சரி பார்க்கின்றார்கள். மூவர் முகங்களிலும் ஒரு இறுக்கம் குடிகொண்டிருந்தது. இதோ நேரம் நெருங்கி விட்டது.!

கட்டி அணைத்து அந்த மாபெரும் வீரனை வழியனுப்ப ஆயத்தமாகின்றனர். அந்த வீரன் எந்த சலனமும் இல்லாது புன்னகையுடன் வெடிகுண்டு பொருத்திய மோட்டார் சைக்கிளில் ஏறினான். அந்த கரும்பச்சை நிற வண்டி அவனது தோற்றத்தை இன்னும் எடுப்பாக்கியது. கரும்புலி வீரன் பின்னால் வர ஏனைய இருவரும் முன்னாள் சென்றனர். குறிப்பிட்ட தூரத்தில் இவர்கள் பின் தங்க கரும்புலிவீரன் முன்னாள் சென்றான்.

போட்ட திட்டத்தின் படியே எந்தப் பிசகும் இல்லாமல் இலக்கும் வந்து சேர்ந்தது. மாவீரர் நாள் தொடங்குவதற்கு ஒரு வாரமே உள்ள நிலையில் 16 காத்திகை 1992ம் ஆண்டு காலை 8.30 மணி போல் Galle Face Green. இல் வைத்து பெரும் ஓசையுடன் குண்டு வெடித்தது.!! கொழும்பே ஒரு கணம் அதிர்ந்து போனது. மிகவும் துல்லியமான திட்டமிடலும், துல்லியமான தாக்குதல் மூலம் சிங்கள அரசின் மிகவும் முக்கிய தளபதி (W.W.E.Clancy Fernando) உட்பட அவருடன் பயணம் செய்த இரு அதிகாரிகள் மற்றும் சாரதியுமாக நால்வர் கொல்லப் பட்டனர்.

உண்மையில் புலிகள் நினைக்காத அளவுக்கு சேதத்தை இந்த தாக்குதல் உண்டுபன்னி இருந்தது. அதற்கு காரணம் அந்த குண்டு, மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் தங்கியை கட்சிதமாக வெட்டி அதனுள் புலிகள் பொருத்தியமை தான் முக்கிய காரணம். 

35 வருட அனுபவமும் பல உலக நாடுகளில் பயிற்சியும் பெற்ற திறமை மிக்க எதிரி ஒருவன் அந்தக் கரும்புலி வீரனால் அழிக்கப்பட்டான். தமிழர் தலை நிமிர்வுடன் அந்த வீரனுக்கும் சேர்த்து அன்றைய மாவீரர் நாளை நினைவு கூர்ந்தனர்..!!! 

நிமிர்வுடன் - ஈழத்து துரோணர்.
« PREV
NEXT »

No comments