Latest News

May 22, 2015

வடக்கில் மீண்டும் பயங்கரவாதம்-விமல்
by Unknown - 0

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர், பாடசாலை மாணவி வித்தியா மீதான வல்லுறவு மற்றும் கொலையின் பின்னணியில் வடக்கின் சிவில் வாழ்க்கை மீண்டுமொருமுறை பாதிக்கப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில் வடக்கில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க இடமுண்டு என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது இன்று வெள்ளிக்கிழமை (22) மேற்கண்டவாறு கூறிய விமல் வீரவன்ச, அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், 'வடக்கில் இராணுவத்தினர் தங்களது தளங்களில் மாத்திரமே நிலைகொண்டுள்ளனர். இதனால், மேற்கண்டவாறான சந்தர்ப்பங்களின் போது சட்டத்தையும் ஒழுங்கையும் பேண முடியாது போகிறது' என சுட்டிக்காட்டினார்.

மேற்படி விவகாரத்தால் வடக்கில் கடையடைப்பு முன்னெடுக்கப்பட்டது. இந்த நிலைமை, நாட்டின் சட்டம் ஒழுங்குக்கு பாரிய அச்சுறுத்தலானது. இது மிக மோசமான நடவடிக்கையொன்றுக்கு வழிவகுக்கிறது. இதனால், தமிழ் ஆயுதக்குழுக்கள் மீண்டும் தலைதூக்க இடமுண்டு. அதனால், சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் மேலும் கூறினார்.
« PREV
NEXT »

No comments