Latest News

May 04, 2015

வடக்கு கிழக்கு பிரதிநிதித்துவத்தை குறைக்கும் எந்தவொரு யோசனைக்கும் ஆதரவில்லை – கூட்டமைப்பு
by Unknown - 0

வடக்கு கிழக்கு மாகாணங்களில் அரசியல் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் வகையிலான எந்தவொரு தேர்தல் திருத்த யோசனைக்கும் ஆதரவளிக்கப்பட மாட்டாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

புதிய தேர்தல் முறைமையின் அடிப்படையில் வடக்கு கிழக்கு அரசியல் பிரதிநிதித்துவம் குறைக்கப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வட மாகாணத்தில் 15 பாராளுமன்ற உறுப்பினர்களும், கிழக்கு மாகாணத்தில் 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் காணப்படும் 160 தேர்தல் தொகுதிகளும் அதே விதமாக காணப்பட்டால் மட்டுமே 20ம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு கிழக்கில் தமிழ் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

யுத்தம் காரணமாக இடம்பெயர்வு அழிவுகள் போன்றவற்றினால் சனத்தொகை வீழ்ச்சியடைந்திருந்தாலும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்கக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் தமிழக அகதி முகாம்களில் வாழ்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கும் வகையில் தேர்தல் முறைமை மாற்றம் செய்யப்படக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் சனத்தொகை குறைவினால் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை குறைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைளை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தடுத்து நிறுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.

சனத்தொகை அடிப்படையில் மாநிலத்தின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை தீர்மானிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
« PREV
NEXT »

No comments