Latest News

May 05, 2015

ரணிலை வீட்டுக்கு அனுப்பவே மைத்திரி-மஹிந்த சந்திப்பு
by Unknown - 0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை வீட்டுக்கு அனுப்புவதற்காகவாகும் என்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது. இந்த சந்திப்பு, நிபந்தனைகள் அற்றவகையில் இடம்பெறும். 

அந்த சந்திப்பை யாராலும் நிறுத்த முடியாது என்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப்பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதிக்கும் இந்நாள் ஜனாதிபதிக்கும் இடையிலான இந்த சந்திப்புக்கு, ஐக்கிய தேசியக்கட்சியே இடையூறு விளைவிக்கின்றது. அதற்கு துணை போகின்ற ஊடகவியலாளர்களும் இருக்கின்றனர். இந்த சந்திப்பை யாராலும் நிறுத்த முடியாது.  

இது கட்சியின் உள்விவகார பேச்சுவார்த்தையாகும். 19ஆம் திருத்தம் கொண்டுவரப்பட்டபோது, அதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆதரவளித்தது. அப்போது சிலர், சு.க இரண்டாகிவிடும் என்று நினைத்தனர். எனினும், அவர்களின் நினைப்பு நிறைவேறவில்லை. 

அடுத்த பொதுத்தேர்தலின் போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் நிறுத்தும் நோக்கோடு இந்த சந்திப்பு இடம்பெறுகின்றதா என வினவுகையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் ரணில் விக்கிரமசிங்கவை வீட்டுக்கு அனுப்பவேண்டும் என்றே கோரிநிற்கின்றனர்.
« PREV
NEXT »

No comments