Latest News

May 04, 2015

ஜோன் கெரியின் விஜயம்! தமிழ்- முஸ்லிம் மத்தியில் அதிருப்தி
by Unknown - 0

அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின்போது கொழும்புக்கு வெளியில் வாழும் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் அதிருப்தி தோன்றியிருக்கலாம் என்று இணையத்தளம் ஒன்று கருத்துரைத்துள்ளது.

ஜோன் கெரி, கொழும்பில் இடம்பெற்ற பௌத்த நிகழ்வு ஒன்றில் மாத்திரமே பங்குபற்றியமை இதற்கான காரணம் என்று அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்காவின் உயர் அதிகாரியான ஜோன் கெரி, தமது விஜயத்தின்போது தமிழ் மற்றும் முஸ்லிம் சமூக பிரதிநிதிகளை சந்திக்கவில்லை.

எனினும் அவர் இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு, போர்க்குற்ற விசாரணை தொடர்பில் இலங்கை அரசாங்கத்துக்கு உரிய அறிவுறுத்தல்களை விடுத்துள்ளார்.

அத்துடன் நல்லிணக்கம், நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் என்பன ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்தும் என்றும் கெரி சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தநிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவில் ஏற்பட்டிருந்த தாக்கம் சிறிசேனவின் ஆட்சிக்காலத்தில் மேம்படும் என்று இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
« PREV
NEXT »

No comments