Latest News

May 22, 2015

திருச்சியில் 10 இலட்சம் மக்களோடு “இன எழுச்சி மாநாடு”
by admin - 0

உலகத் தமிழர்களை “தமிழ் இனம்” என்ற ஓரணியில் திரட்ட கடந்த 6 ஆண்டுகளாக பல சவால்களை சந்தித்து, பல தடைகளை உடைத்து, இன்று நிமிர்ந்து நிற்கும் செந்தமிழன் சீமான் தலைமையில் திருச்சியில் மாபெரும் “இன எழுச்சி அரசியல் மாநாடு” நடைபெறவுள்ளது.

24-05-2015 ஞாயிற்றுக்கிழமை திருச்சியில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டிற்கு சுமார் 10 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கூடுவார்கள் என்ற எதிர்பார்ப்போடு மிக மிக பிரம்மாண்டமாக ஏற்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டு இருக்கிறது.

யாதி, மதம், கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் அனைத்து தமிழர்களும் தமிழினம் (தமிழன்) என்ற ஒரே சிந்தனையோடு ஒம் மாபெரும் மாநாட்டிற்கு வருகை தர வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் நடைபெறவுள்ள இந்த  மாநாட்டிற்கு கட்சித் தலைவர்களை சீமான் அவர்களே நேரில் சென்று அழைத்து வருகிறார்.

உலகெங்கும் உள்ள நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என பல நூற்றுக்க ணக்கானவர்கள் மலேசிய, அவுஸ்திரேலியா, கனடா, பிரித்தானியா, பிரான்ஸ், சுவிஸ், ஜேர்மன் ஆகிய நாடுகலிலிருந்து இம் மாநாட்டிற்கு செல்லத் தொடங்கியுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த மாநாடு எதிர்பார்ப்பது போள் வெற்றிகரமாக நடந்துமுடியுமானால் இது இந்த மாநாட்டின் வெற்றி என்பதை தாண்டி இதுவே எதிர்காலத்தில் தமிழர்களின் சுதந்திரத்திற்கும், தமிழர்களுக்கான நாடு உருவாவதற்கும் வழி வகுக்கும் என்பதில் ஐயமில்லை.

இன எழுச்சிக்கான இந்த மா நாட்டிற்கு வருகை தராத எந்த தமிழ் நாட்டுத் தலைவர்களும் இனி வருங்காலங்களில் தம்மை தமிழர்களின் பிரதி நிதியாக மட்டுமல்ல, ஒரு தமிழன் என சொல்லவே வெட்கப்படவேண்டும்.

« PREV
NEXT »

No comments