Latest News

April 29, 2015

மையூரனை விடுவிக்க மில்லியன் டாலர் பேரம் பேசிய நீதிபதி: அவுஸ்திரேலியா வழக்கு !
by admin - 0


இந்தோனேசியாவில் 2006ம் ஆண்டு மையூரனுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது யாவரும் அறிந்ததே. அதனை எதிர்த்து அவர் 2011ம் ஆண்டு மேன்முறையீடு செய்தார். அந்தவேளை நீதிபதிகளில் ஒரிவர் , அவுஸ்திரேலிய அதிகாரிகளோடு பேரம் பேசியுள்ளார். மரணதண்டனையை ரத்துச் செய்ய எவ்வளவு பணம் தேவை என்று அவுஸ்திரேலிய அதிகாரிகள் கேட்ட , அவர் 1 பில்லியன் டாலர்களை கோரியுள்ளார். அது அளவுக்கு மிஞ்சிய பணம் என்றும் , அதனை தரமுடியாது என்றும் அதிகாரிகள் கூறிச் சென்றுவிட்டார்கள். ஆனால் அவர்கள் முழு உரையாடலையும் , பதிவுசெய்து வைத்திருந்துள்ளார்கள்.

தற்போது இந்தோனேசிய நீதிமன்றில் , அவுஸ்திரேலியா சார்பாக ஒரு வழக்கு தொடரப்பட்டு உள்ளது. 

 தமது நாட்டில் சட்ட திட்டங்கள் எபொழுதும் கடுமையாக இருக்கும் என்றும் ,அது மிகவும் நேர்த்தியாக இருப்பதனால் தான் அதனை மீற முடியாது என்றும் ஜானாதிபதி அடிக்கடி கூறிக்கொள்வார். அப்படி இருக்கையில் , இந்தோனேசிய நீதிபதி ஒருவர் , அதுவும் மையூரன் வழக்கில் சம்பந்தப்பட்ட நீதிபதி எவ்வாறு பேரம் பேசினார் ?

அப்படி அவர் பேரம் பேசியதன் மூலம் இந்தோனேசிய சட்டத்தை அவர் மீறியுள்ளார். மேலும் அவரால் எவ்வாறு சரியான மற்றும் நீதியான தீர்ப்பை வழங்கியிருக்க முடியும் என்று கேட்டு அவுஸ்திரேலியா வழக்கை தொடுத்துள்ளது. ஒரு அதிகாரியோடு நீதிபதி பேரம் பேசினார் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. 


ஆனால் அவர் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் என்பது அனைவரும் அறிந்த விடையம் தான். இந்த வழக்கு தற்போது சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. ஒருவேளை குறித்த நீதிபதி தவறு செய்துள்ளார் என்று கண்டுபிடிக்கப்பட்டால் பெரும் சர்சை தோன்ற வாய்ப்புகள் உள்ளது. பொறுத்திருந்து தான் பார்கவேண்டும்.

« PREV
NEXT »

No comments