Latest News

March 29, 2015

இலங்கையில் குற்றசெயல்கள் அதிகரிப்பு ஜெனிவா சென்று முறையிட மகிந்த முடிவாம்
by admin - 0

vivasaayi,tgte
இலங்கையில் குற்றசெயல்கள் அதிகரிப்பு ஜெனிவா சென்று முறையிட மகிந்த முடிவாம் 

முன்னர் ஒருகாலத்தில் பல கொலைகளின் தலைவன் மகிந்த ராஜபக்ச அவர்கள் ஒரு மனித நேய போராட்டத்தில் இடுபட்டவராம்  அதாவது 25 ஆண்டுகள் முன்னர்     1987- 1989 காலகட்டத்தில் சிங்கள இளைஞர்கள் கொலை செய்யப்பட்டதற்கு எதிராக நின்று ஜெனீவாவிற்கு  விஜயம் செய்து இலங்கையில் நடைபெறும் கொலைகள் பற்றிய மனித உரிமைகள் அமைப்புக்களிடம்  புகார் அளித்தவர் மகிந்த  அந்த காலகட்டத்தில் இந்த மஹிந்த  பாராளுமன்றத்தில் ஒரு  அமைச்சர்.

அனால் பின்னர் வந்த காலப்பகுதியில் இவருடைய கோரத்தாண்டவம் உலகம் அறிந்தது .  இவருடைய இந்த மனம் மாற்றம்  ஏன் வந்தது என்று பார்த்தால் உண்மையில் அவருடைய மனதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை அதாவது சிங்கள இளையவர்கள் கொள்ளப்படும் போதே அவர் UN சென்று முறையிட்டார் அதன்பிறகு தமிழர்களை அழித்தார் .தற்பொழுது ஜெனிவா செல்லபோகிறேன் என்பது மைத்திரி ஆட்சியில் நடக்கும் சட்ட ஒழுங்கு பிரச்சனை காரணமாகவே செல்கிறேன் என்கிறார் அதாவது தனது நலன் சார்ந்தே அடுத்த பிரதமர் கதிரையில் அமர சிங்கள மக்களின் வாக்குகளை அதிகரிக்க  ஜெனிவா செல்லப்போகிறார்.தமிழர்கள் ஜெனிவா சென்றதை எதிர்த்து சர்வதேசத்தை பகைக்க துணிந்த மகிந்த சர்வதேசத்திடம் முறையிட செல்வதாக கூறுவது நகைப்புக்குரிய செயலாக தெரிகிறது.



« PREV
NEXT »