Latest News

March 29, 2015

ஜேர்மன்-விங்ஸ் விமான விபத்தும் விபத்தின் பின்விளைவுகளும்
by admin - 0

விமானப் பய­ணமா, அச்சம் வேண்டாம் என்று தொழில்­நுட்ப நிபு­ணர்கள் உத்­த­ர­வாதம் தரும் யுகத்தில் வாழ்­கிறோம்.
இன்று தொழில்­நுட்ப ரீதி­யாக முன்­னே­றி­யி­ருக்­கிறோம். எது­வித கோளா­று­களும் இல்­லாமல் பாது­காப்­பாக பய­ணத்தைப் பூர்த்தி செய்­யலாம் என்று விமானச் சேவை நிறு­வ­னங்கள் உறு­தி­ய­ளிப்­பதைக் காணலாம்.
உண்மை தான். எஞ்சின் பழு­த­டைந்­ததால் விமானம் வீழ்ந்து நொருங்­கி­யது என்­பது போன்ற செய்­திகள் கடந்த காலத்­திற்­கு­ரி­யவை. எனினும், சமீ­பத்­திய கால­மாக வான்­ப­ரப்பில் நிகழும் சம்­ப­வங்கள் விமானப் பயணம் பாது­காப்­பா­ன­தாக இல்லை என்ற உணர்வை ஏற்­ப­டுத்தி நிற்­கின்­றன.
vivasaayi,news,tamilnews,tamilwin
Accident

ஜேர்மன் விங்ஸ் விமா­னத்தின் இறுதி நிமி­டங்கள்

புகழ்­பெற்ற லுப்­தான்ஸா நிறு­வ­னத்தின் கிளை அமைப்­பான ஜேர்­மன்- விங்ஸ். அதற்கு சொந்­த­மான எயார்பஸ் ஏ-320 ரகத்தைச் சேர்ந்த விமானம் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை காலை 9.01 அளவில் ஸ்பெயினின் பார்­சி­லோனா நகரில் இருந்து புறப்­ப­டு­கி­றது. 150 பேருடன் ஜேர்­ம­னியின் டுவெஸ்­ஸல்டொர்வ் நகரை நோக்­கிய பயணம். விமானம் அரை மணித்­தி­யா­லங்­களில் 38,000 அடிகள் வரை உயர்­கி­றது. நேரம் சரி­யாக காலை 9.31. விமா­னி­களின் அறையில் (கொக்பிற்) இருந்து வழமை போல பய­ணத்தைத் தொடர கட்­டுப்­பாட்டு அறையின் அனு­மதி கேட்­கப்­ப­டு­கி­றது. ஒரு நிமிடம் கழி­கி­றது. விமானம் சடு­தி­யாக கீழி­றங்­கு­கி­றது. கழி­வ­றைக்கு சென்ற தலைமை விமானி கொக்­பிற்றை அடைய முனை­கிறார். கதவு மூடி­யி­ருப்­பதை அவ­தா­னிக்­கிறார். கொக்­பிற்றில் துணை­வி­மானி. தலைமை விமானி கதவைத் தட்­டு­கிறார். எது­வித பதிலும் இல்லை. பல­மாக தட்­டு­கிறார். மறு­பக்­கத்தில் இருந்து மௌனம். கட்­டுப்­பாட்டு அறையில் இருந்து விமா­னியின் அறையத் தொடர்பு கொள்­கி­றார்கள். அதற்கும் பதில் இல்லை. விமானம் தரையை நெருங்­கு­கி­றது. பய­ணிகள் வீரிட்டுக் கத்­து­கி­றார்கள். எல்லாம் முடி­கி­றது. சரி­யாக 9.40 அளவில் விமானம் பிரான்ஸின் அல்ப்ஸ் மலைத்­தொ­கு­தியில் மோதி நொருங்­கு­கி­றது.

கடந்த வார விமான விபத்து பற்றி ஆராயும் நிபு­ணர்கள், துணை விமா­னியின் மீது விரல் நீட்­டு­கி­றார்கள். இந்த மனிதர் வேண்­டு­மென்றே விமா­னத்தை நிர்­மூலமாக்­கி­யி­ருக்­கிறார் என்­பது நிபு­ணர்­களின் கணிப்பு. விமா­னி­களின் அறையில் நிகழும் சம்­பா­ஷ­ணை­களைப் பதிவு செய்­யக்­கூ­டிய கறுப்புப் பெட்டி என்­பது விபத்­துக்­கான கார­ணத்தைக் கண்­ட­றி­வதில் மிகவும் முக்­கி­ய­மான கரு­வி­யாகும். அதில் பதிவு செய்­யப்­பட்ட சப்­தங்­களை ஆராய்­கையில், துணை விமா­னியின் நோக்கம் தெளி­வா­கி­ற­தென பிரான்ஸைச் சேர்ந்த விசா­ரணை உத்­தி­யோ­கத்­தர்கள் கூறு­கி­றார்கள்.
தலைமை விமானி இயற்­கையின் தேவையை நிறை­வேற்­று­வதற்­காக கொக்­பிற்றில் இருந்து வெளி­யே­றிய சில நிமி­டங்­களில், துணை விமானி விமா­னத்தை தமது கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வந்­தி­ருக்­கிறார். விமா­னத்தைக் கீழி­றக்­கு­வ­தற்­கான பொத்­தனை அழுத்­தி­யி­ருக்­கிறார்.
கொக்பிற் கதவு தட்­டப்­படும் சம­யத்தில் துணை விமானி காத்த மௌனம், விமா­னத்தை நிர்­மூ­ல­மாக்க வேண்டும் என்ற நோக்­கத்தைத் தெளி­வு­ப­டுத்­து­வ­தாக நிபு­ணர்கள் கூறு­கி­றார்கள்.
விசா­ர­ணையில் கண்­ட­றி­யப்­பட்ட விட­யங்­களைத் தொடர்ந்து, இரண்டு விட­யங்கள் மீது கவனம் செலுத்­தப்­ப­டு­கி­றது. முத­லா­வது விடயம், அன்ட்­ரியஸ் லுபிட்ஸின் பின்­புலம். விமா­னங்­களின் பாது­காப்பை உறுதி செய்­வ­தற்­காக கொக்பிற் விதி­மு­றை­களை இறுக்­க­மாக்­குதல் என்­பது இரண்­டா­வது விடயம்.
ஒரு விமா­னியின் பணி உன்­ன­த­மா­னது. நூற்­றுக்­க­ணக்­கான பய­ணி­களின் உயிர்­க­ளுக்கு உத்­த­ர­வாதம் அளிக்க வேண்­டிய பொறுப்பு விமா­னியைச் சார்ந்­தது. இந்தப் பொறுப்பில் எது­வித சம­ர­சங்­க­ளுக்கும் இட­மி­ருக்க முடி­யாது.
ஒரு விமா­னியை முதற்­த­ட­வை­யாக கொக்­பிற்­றுக்குள் அனு­ம­திப்­ப­தற்கு முன்னர், அவர் உடல் ரீதி­யா­கவும், உள ரீதி­யா­கவும் தகு­தி­யா­ன­வரா என்­பதைக் கண்­ட­றி­வ­தற்­காக எத்­த­னையோ சோத­னைகள் நடத்­தப்­ப­டு­வது வழக்கம்.
இத்­த­கைய சகல சோத­னை­க­ளையும் லுபிட்ஸ் தாண்­டி­யி­ருக்­கிறார் என்று லுப்­தான்ஸா நிறு­வனம் அறி­வித்­துள்­ளது. அவர் 100 சத­வீதம் தகு­தி­யா­ன­வர­ாகத் திகழ்ந்தார் என்று நிறு­வ­னத்தின் பிர­தா­னியும் கூறி­யி­ருந்தார்.

இன்று லுபிட்ஸின் பின்­புலம் பற்றி விசா­ரிக்கும் உத்­தி­யோ­கத்­தர்கள், அவ­ருக்கு மன அழுத்தம் இருந்­தி­ருக்­குமா என்­பதன் மீது கவனம் செலுத்­தி­யி­ருக்­கி­றார்கள்.
தீவிர மன அழுத்தம் என்­பது சடு­தி­யான தீர்­மா­னங்­க­ளுக்கு வித்­தி­டு­மென உள­வியல் நிபு­ணர்கள் கூறு­வார்கள். மன அழுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட நபர்கள் திடீ­ரென தற்­கொலை செய்து கொள்­வது வியப்­பான விடயம் அல்ல என்­பது அவர்­களின் கருத்து.
லுபிட்ஸின் இல்­லத்தில் இருந்து தட­யங்கள் தேடப்­ப­டு­கின்­றன. தற்­கொலை குறித்த எது­வித குறிப்­புக்­களும் இது­வரை கிடைக்­க­வில்லை. இருந்­தாலும், நோய் பற்­றிய சிறு­கு­றிப்­புகள் மீட்­கப்­பட்­ட­தாகத் தெரி­கி­றது.

இந்த 27 வய­து­டைய மனிதர் தமக்­குள்ள நோயை தாம் வேலை செய்யும் நிறு­வ­னத்­திற்கு மறைத்­தி­ருக்­கலாம் என்­பது பிந்­திய கணிப்பு.

இந்த விட­யத்தின் மீது விமானச் சேவை நிறு­வ­னங்கள் கூடுதல் கவனம் செலுத்­து­வதைக் காணக்­கூ­டி­ய­தாக இருக்­கி­றது.

ஒரு விமா­னிக்கு தொழில் ரீதி­யாக அல்­லது தனிப்­பட்ட ரீதி­யாக பிரச்­ச­ினைகள் எழலாம். அத்­த­கைய பிரச்­சி­னைகள், அவ­ரது தொழிலில் எத்­த­கைய தாக்­கத்தை செலுத்தும் என்­பதை விமானச் சேவை நிறு­வ­னங்கள் அறிந்து வைத்­துள்­ளன. அதன் கார­ண­மாக, எத்­த­கைய சலு­கை­களை வழங்க முடி­யுமோ, அத்­த­கைய அனைத்து சலு­கை­களும் விமா­னி­க­ளுக்கு வழங்­கப்­படு­வதைக் காணலாம்.
அவற்­றையும் தாண்டி பல விதி­மு­றைகள் அமு­லா­கின்­றன. விமா­னிகள் எது­வித தொந்­த­ரவும் இல்­லாமல் விமா­னத்தை செலுத்­து­வ­தற்கும், விமா­னி­களின் அறை­க­ளுக்குள் வேறு நபர்கள் ஊடு­ரு­வதைத் தடுப்­ப­தற்கும் பல சட்­ட­திட்­டங்கள் அமுலில் உள்­ளன.
செப்டெம்பர் 11 சம்­ப­வத்தைத் தொட ர்ந்து கொக்பிற் கத­வுகள் பலப்­ப­டுத்­தப்­பட்ட விதத்­தையும் நினைவு கூரலாம். எறி­குண்டு வீசி­யெ­றி­யப்­பட்­டாலும் உடை­யாத விதத்தில் கொக்பிற் கத­வுகள் வடி­வ­மைக்­கப்­பட்­டன.

கொக்பிற் கதவைத் திறப்­ப­தற்­கு­ரிய கரு­வி­களில் சங்­கேத இலக்­கங்கள் அறி­முகம் செய்­யப்­பட்­டன. அதற்குள் நுழையும் எவரும் விமா­னியின் அனு­ம­தியைக் கோர வேண்டும். சரி­யான சங்­கேத இலக்­கத்தை அழுத்­தினால் மாத்­தி­ரமே அனு­மதி கிடைக்கும்.

ஜேர்­மன்- விங்ஸ் விமா­னத்தைப் பொறுத்­த­வ­ரையில், இந்த விடயம் மாறி நடந்­தி­ருக்­கி­றது. தலைமை விமானி வெளியே இருக்கும் சந்­தர்ப்­பத்தில், துணை விமானி உள்ளே இருந்து விமா­னத்தை தனது கட்­டுப்­பாட்டின் கீழ் கொண்டு வந்­தி­ருக்­கிறார்.

இந்த சம்­ப­வத்தைத் தொடர்ந்து, விமானச் சேவை நிறு­வ­னங்கள் புதிய விதி­மு­றை­களை அறி­முகம் செய்­தி­ருக்­கின்­றன. சகல சந்­தர்ப்­பங்­க­ளிலும் கொக்­பிற்றில் இருவர் இருப்­பதை உறுதி செய்யும் வகை­யி­லான விதி­முறை பிர­தா­ன­மா­னது. இதன் பிர­காரம், எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் விமா­னத்தின் கட்­டுப்­பாடு தனி­யொ­ரு­வ­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட மாட்­டாது.

இதில் பிர­தா­ன­மான விடயம் யாதெனில், அமெ­ரிக்க மற்றும் ஐரோப்­பிய விமானச் சேவை நிறு­வ­னங்­க­ளுக்கு இடை­யி­லுள்ள வித்­தி­யாசம் தான். கொக்­பிற்றில் இரு விமா­னிகள் இருக்க வேண்டும் என்ற நிய­தியை அமெ­ரிக்க விமா­ன­மோட்­டிகள் சங் கம் 2002ஆம் ஆண்­டி­லேயே அறி­முகம் செய்­தது.

ஐரோப்­பிய விமானச் சேவை நிறு­வ­னங்­களில் அது கட்­டா­ய­மாக்­கப்­ப­ட­வில்லை. ஜேர்­மன்- விங்ஸ் விமான விபத்தைத் தொடர்ந்து, நோர்வே உள்­ளிட்ட பல நாடுகள் அத்­த­கைய விதி­மு­றை­களை அனு­ச­ரிக்கத் தொடங்­கி­யுள்­ளன.

விமா­னங்­களின் பாது­காப்பை உறுதி செய்ய வேண்­டு­மாயின், ஒவ்­வொரு நாடும் தனித்­த­னி­யாக விதிமுறைகளை அமுலாக்குவதில் அர்த்தமில்லை என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். இதற்கு சர்வதேச ரீதியிலான நியமங்கள் அவசியம் என்பது அவர்களின் கருத்து.
ஒவ்­வொரு தட­வையும் விமான விபத்து நிகழும் சமயம், அதற்­கு­ரிய கார­ணங்­களை ஆராய்­கி­றார்கள். அந்தக் கார­ணத்­திற்­காக பரி­காரம் தேடு­கி­றார்கள். அத்­த­கைய பரி­காரம் ஒரு நாட்­டுக்கோ, கம்­ப­னிக்கோ மட்­டுப்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. இது ஆரோக்கியமானது அல்ல என்று விமானப் போக்குவரத்து துறை சார்ந்த நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இந்த வாதம் உண்மை என்றே தோன்­று­கிது. மலே­ஷிய எயார்லைன்ஸ் நிறு­வ­னத்தின் எம்.எச்.-370 விமானத்திற்கு என்ன நடந்­தது என்று கண்டு பிடிக்கப்­படும் பட்­சத்தில், புதிய காரணம் சொல்­லப்­ப­டலாம். அதற்கு பரி­கா­ரமும் முன்­வைக்­கப்­ப­டலாம். அது சர்வதேச ரீதியான பரிகாரமாக அமைய வேண்டியது முக்கியமானது என்பதையே இப்போதைக்கு கூற வேண்டியதாக இருக் கிறது.
« PREV
NEXT »