Latest News

March 25, 2015

யாழில் திட்டமிட்ட போதைப்பொருள் அதிகரிப்பு
by admin - 0

போதைப்பொருள்
JAFFNA
யாழ். மாவட்­டத்தில் திட்டமிட்டு  போதைப்பொருள்  பாவனை அதி­க­ரித்துள்ளதுடன். பாட­சாலை மாண­வர்­கள் போதை பாவ­னைக்கு அடி­மை­யாகும் நிலை அண்­மைக்­கா­லமாக அதி­க­ரித்து வரு­கின்றது என பெற்றோர் மற்றும் சமூக ஆர்­வ­லர்கள் கவலை தெரி­விக்­கின்­றனர்.

யாழ். மாவட்­டத்தில் கடந்த சில வரு­டங்­க­ளாக போதைப்பொருள் பாவனை குறிப்­பிட்ட சில இடங்­களில் இருந்து வந்த போதிலும் அண்­மைக்­கா­லத்தில் குறிப்­பி­டத்­தக்க அள­வுக்கு அதி­க­ரித்­துள்­ளது. அத்­துடன் பாட­சாலை மாண­வர்கள் மட்­டத்­திலும் பல்­வேறு வடி­வங்­களில் போதைப்பொருட்கள் பாவ­னைக்கு வந்­துள்­ளன. மாணவர்கள் புகைப்­பொ­ரு­ளா­கவும் மெல்­லு­கின்ற பாக்கு மற்றும் லேகிய வடி­விலும் பாவ­னையில் இருப்­ப­தாக கூறப்­ப­டு­கின்­றது. போதைப்பொருட்களுடன் சம்­பந்­தப்­பட்ட மாண­வர்­களின் மீது பாட­சாலை நிர்­வா­கமோ, தனியார் கல்வி நிர்­வா­கமோ நட­வ­டிக்கை எடுக்க தயங்­கு­வ­தாக கூறப்­ப­டு­கி­றது.

அதனால் தனிப்­பட்ட பாதிப்­புக்கள் மற்றும் நிறு­வ­னத்­துக்கு ஏற்­ப­டக்­கூ­டிய பாதிப்­புக்­களை கருத்தில் கொண்டு மேல் நட­வ­டிக்­கை­களை தவிர்த்து வரு­வ­தாக கூறப்­ப­டு­கின்­றது. இந்த நிலைமை சம்­பந்­தப்­பட்ட மாண­வர்­க­ளுக்கு வசதியாக இருப்பதோடு புதியவர்களும் இணைந்து கொள்வதற்கு வாய்ப்பாக உள்ளது என சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர் விசனம் தெரிவிக்கின்றனர்.
« PREV
NEXT »