Latest News

February 18, 2015

கிழக்கு மாகாண உறுப்பினர் இனியபாரதிக்கு எதிராக அம்பாரையில் ஆர்ப்பாட்டம்
by admin - 0

vivasaayi
EAST
கிழக்கு மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினரான இனியபாரதி எனப்படும் கே. புஸ்பகுமாருக்கு எதிராக இன்று புதன்கிழமை அம்பாரை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திருக்கோவில் மற்றும் ஆலையடிவேம்பு ஆகிய பிரதேசங்களை சேர்ந்த பெண்கள் உட்பட பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்து கொண்டார்கள்.
2004க்கு பின்னரான காலங்களில் தமது உறவுகள் பலர் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ள சம்பவத்திற்கு இவரே பொறுப்பு என ஆர்பாட்டக்காரர்களால் குற்றச்சாட்டுக்களும் முன் வைக்கப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தின் முடிவில் அங்கு பாதுகாப்பு கடமைக்காக வருகை தந்திருந்த பிரதேச உதவி பொலிஸ் அத்தியட்சகர் டி.கே. கேமந்த டிக்கோவிடம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சந்திரநேரு சந்திரகாந்தன் மனுவொன்றை ஆர்பாட்டக்காரர்கள் சார்பாக கையளித்தார்.
ஏற்கனவே தமிமீழ விடுதலைப்புலிகள் உறுப்பினராகவிருந்த இனியபாரதி 2005 ம் ஆண்டு அந்த அமைப்பில் கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட பிளவு காரணமாக வெளியேறியிருந்தார்.
தமிழீழ விடுதலைப்புலிகளிலிருந்து பிரிந்தவர்களினால் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் அம்பாரை மாவட்ட பொறுப்பாளராக அவ்வேளையில் அவர் நியமிக்கப்பட்டிருந்தார்.
பின்னர் முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவின் பதவிக் காலத்தில் ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் இணைந்து சில காலம் அவரது அம்பாரை மாவட்ட இணைப்பாளராகவும் செயல்பட்டள்ளார்.
2010 பொதுத் தேர்தலிலும் 2012ம் ஆண்டு கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலும் அம்பாரை மாவட்டத்தில் ஐ.ம.சு. முன்னனி வேட்பாளராக போட்டியிட்ட போதிலும் தெரிவாகவில்லை.
இருப்பினும் கிழக்கு மாகாண சபையின் ஆளும் கட்சிக்குரிய போனஸ் ஆசனம் மூலம் கிழக்கு மாகாண சபையயில் உறுப்பினராக இவர் தற்போது பதவி வகிக்கின்றார்.
அம்பாரை மாவட்டத்தில் ஆட்கள் காணாமல் போன சம்பவங்கள் தொடர்பில் உள்நாடடு மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் இவர் மீது குற்றச்சாட்டுக்களை அவ்வேளைகளில் முன் வைத்திருந்தாலும் அது அவரால் அவ்வேளைகளில் மறுக்கப்பட்டன.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவினால் நியமிக்கப்பட்டிருந்த எல. எல். ஆர் சி எனப்படும் படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு வும் தமது அறிக்கையில் இவருக்கு எதிரான சாட்சியங்கள் பற்றி குறிப்பிட்டிருந்தன.
vivasaayi


கிழக்கு மாகாண உறுப்பினர் இனியபாரதிக்கு எதிராக அம்பாரையில் ஆர்ப்பாட்ட

கிழக்கு மாகாண உறுப்பினர் இனியபாரதிக்கு எதிராக அம்பாரையில் ஆர்ப்பாட்ட

கிழக்கு மாகாண உறுப்பினர் இனியபாரதிக்கு எதிராக அம்பாரையில் ஆர்ப்பாட்ட
« PREV
NEXT »