Latest News

January 25, 2015

இராணுவ அடக்குமுறை மற்றும் பிரசன்னம் இன்னும் குறையவில்லை
by admin - 0

சர்வாதிகார அரசாங்கத்தை அகற்றி மக்களுக்கு நல்லாட்சியையும் மாற்றத்தையும் கொண்டுவரப்போவதாக ஜனாதிபதி கூறிவருகின்ற நிலையில் வடக்கு கிழக்கு தமிழர் வாழும் பகுதிகளில் இன்னமும் மகிந்தராஜபக்ஷவால் தமிழரை நசுக்க பழக்கப்படுத்தப்பட்ட இராணுவத்தினரின் தலையீடுகளும் நெருக்குவாரங்களும் இம்மியளவும் குறைந்ததாக தெரியவில்லை.

ரோந்துகளும் புலனாய்வு துறையினரின் மோப்பங்களும் தொடர்கின்றது.இதன் மூலம் இந்த நாட்டிலும் தமிழ் மக்கள் வாழ்விலும் நம்பிக்கை வருமென நம்பி வாக்களித்த மக்களின் மனதில் அச்சமும் நம்பிக்கையின்மையிலும் ஏற்பட்டுவருகின்றது.

நேற்று கிளிநொச்சி உருத்திரபுரத்திரம் சாஜிமுன்பள்ளியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பா.உறுப்பினர் சி.சிறீதரன் கலந்துகொள்ளச்சென்றபொழுது அங்கு இராணுவப் பிரசன்னமே நிறைந்திருந்தது.முன்பள்ளியில் இராணுவச்சீருடைகளே அதிகமாக இருந்தது அங்கிருந்த மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியிருந்தது.

இதே வேளையில் பயங்கரவாத தடுப்புபிரிவால் முன்னைய நாள் போராளிகள் விசாரணைகளுக்கு அழைக்கப்படுவதுடன் மன உளைச்சலுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர்.

நேற்று மேற்படி முன்பள்ளி நிகழ்வில் கலந்துகொண்ட பா.உறுப்பினர் உரையாற்றுகையில் உருத்திரபுரத்தின் எம் எதிர்கால சந்ததி சிறந்த முறையில் நல்லதொரு கல்விச்சூழலில் கல்வி கற்பதற்கு ஒரு அழகான முன்பள்ளியொன்றை அமைத்துக்கொடுத்துள்ள யுஎன்க பிராற் நிறுவனத்துக்கும் அதன் பொறியிலாளர் யுகநேசனுக்கும் இந்த முன்பள்ளி அமைய ஒத்துழைத்த இந்த முள்பள்ளி சமுகத்துக்கும் என் பாராட்டுக்களையும் நன்றிகளையும் நான் தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.

« PREV
NEXT »

No comments