Latest News

December 12, 2014

லிங்கா விமர்சனம்
by admin - 0

50 ஆண்டுகளுக்கு முன்பு கடுமையான தண்ணீர்ப் பஞ்சம் வருகிறது. அதைப் போக்குவதற்காக கலெக்டர் ரஜினி இன்ஜினீயராகி தன் சொந்த செலவில் ஆற்றின் குறுக்கே அணை கட்ட முயற்சிக்கிறார். அப்போது சமூக விரோதக் கூட்டம் ஆங்கிலேயருடன் சேர்ந்து கொண்டு அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்துகிறது. "எனக்கு இந்துவும் வேணாம், கிறிஸ்தவரும் வேணாம். முஸ்லிமும் வேணாம். செட்டியார், முதலியார், நாடார் வேணாம். இந்தியனா இருக்குறவங்க மட்டும் என் கூட வாங்க" என்று ரஜினி அழைக்கிறார். மக்கள் படை திரண்டு வருகிறது. அவர்களோடு இணைந்து அணை கட்டுகிறார். ஊர் நாட்டாமை விஜயகுமார் ரஜினியை நினைத்துப் பெருமைப்படுகிறார்.


அணை கட்டுவதற்கு உதவியாகவும், ரஜினிக்கு ஆறுதலாகவும் இருக்கும் சோனாக்ஷி சின்ஹா சந்தோஷப்படுகிறார். அப்போதுதான் நடக்கக்கூடாத அந்த விபரீதம் நடக்கிறது. ஆங்கிலேயருக்குக் கைத்தடியாக இருக்கும் ஆர்.சுந்தர்ராஜன், அணை திறப்பு விழாவிற்கு வரும் ரஜினியை அவமானப்படுத்துகிறார். இதனால், மனம் கலங்கும் ரஜினி அணை திறக்காமலேயே சென்று விடுகிறார். அதற்குப் பிறகு அந்த அணையை மக்கள் கடந்து செல்லும்போது அடிக்கடி விபத்து நடக்கிறது. சிலர் கொலை செய்யப்படுகிறார்கள்.


அணை கட்டிய ரஜினியை அவமானப்படுத்தியதால்தான் இப்படியெல்லாம் நடக்கிறது என்று கருதும் மக்கள் பல ஆண்டுகளுக்குப் பிறகு அவரை தேடிக் கண்டுபிடித்து அழைத்து வருகிறார்கள். அவர் வந்ததும் என்ன நடக்கிறது என்பது ஒரு கதை.

அடுத்து இன்னொரு ரஜினியின் கதை. எந்த கட்டுப்பாடும் இல்லாமல் அடிதடி, திருட்டு, கடத்தல் என வாழும் தாதா ரஜினி. எந்த இடத்தில் வைரம் கிடைத்தாலும் அதைக் கொள்ளையடித்துவிட்டுதான் அடுத்த வேலை பார்ப்பார். அவரை போலீஸ் வலைவீசி தேடுகிறது. அணை வழியாக வரும் ரஜினி அங்கேயே தலைமறைவாகி விடுகிறார். அப்போதுதான் அந்த அணைக்குள் ஒரு கூட்டம் ஒளிந்திருந்து கொலை செய்வது பெண்களை மானப்பங்கபடுத்துவது போன்ற காரியங்களை செய்து வருவதைக் கண்டுபிடிக்கிறார். அவர் எப்படி அணையை மீட்டு மக்களை காப்பாற்றுகிறார்கள் என்பதுதான் மீதிக்கதை.

கொள்ளையன் ரஜினிக்கு அனுஷ்காதான் ஜோடி. கலெக்டர் ரஜினி - சோனாக்ஷி சின்ஹா ஆடிப் பாடும் பொங்கல் பாடல் ஒன்று இடம் பெறுகிறது. இதில் ஊர் மக்களுக்கு பொங்கல் வேட்டி - சேலைகளைக் கொடுப்பதைப் போல காட்சி அமைக்கப்பட்டுள்ளது. 
« PREV
NEXT »