Latest News

December 17, 2014

டோனி தான் அணித்தலைவர்..விவாதம் வேண்டாம்: கவாஸ்கர் `நறுக்’ கருத்து
by Unknown - 0

அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அணித்தலைவர் பதவி பற்றி விவாதம் தேவையில்லை என முன்னாள் இந்திய அணித்தலைவர் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் விராட் கோஹ்லி அணித்தலைவராக செயல்பட்டார். தனது அறிமுக அணித்தலைவர் பதவிலேயே இரண்டு இன்னிங்ஸிலும் சதம் அடித்து அசத்தினார்.
டிராவுக்காக ஆடாமல் வெற்றியை நோக்கி விளையாடியது துணிச்சலானது என்று விராட் கோஹ்லியின் செயல்பாட்டை முன்னாள் வீரர்கள் சிலர் பாராட்டினர்.
மேலும், டெஸ்ட் அணித்தலைவர் பதவியில் அவரை நிரந்தரமாக நியமிக்க வேண்டும். அதற்கு இதுவே சரியான நேரம் என்று அவுஸ்திரேலிய முன்னாள் அணித்தலைவர் இயன் சேப்பல் கருத்து தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து கோஹ்லிக்கு ஆதரவு அதிகரித்தது. இதனால் டோனியின் அணித்தலைவர் பதவி குறித்து விமர்சனம் எழுந்தது.
இந்நிலையில் முன்னாள் அணித்தலைவரும், டெலிவிசன் வர்ணனையாளருமான கவாஸ்கர் இது குறித்து கூறுகையில், அவுஸ்திரேலிய தொடரில் டோனி தான் அணித்தலைவர்.
விராட் கோஹ்லி தொடர்ந்து அணித்தலைவராக இருக்க வேண்டும் என்று தெரிவு குழு டோனியிடம் சொன்னது கிடையாது. இதனால் அணித்தலைவர் பதவி எந்த கேள்வியும் எழுப்ப தேவையில்லை. இது ஒரு கேள்வியை தான் உருவாக்கும் என்று நான் கருதுகிறேன்.
எஞ்சிய 3 டெஸ்டுக்கும் டோனி தான் தலைவர். இந்த தொடருக்கு அவர் அணித்தலைவராக நியமிக்கப்பட்டுளள்ளார் என்று கூறியுள்ளார்.
« PREV
NEXT »