Latest News

December 26, 2014

துயரத்துக்கு மத்தியிலும் சிங்கள பேரினவாத்தின் இராணுவ குடியேற்றங்கள் வருவதற்க்கான அறிகுறிகள் -நாவலடி மக்கள்
by admin - 0

ஒரு தசாப்தம் கடந்தும் இன்றுவரைக்கும் அதே நிலையில் அதிக உயிரை இழந்த நாவலடி மக்கள்
கோரத் தாண்டவமாடிய சுனாமியின் ஒரு தசாப்தம் முடிவடைந்த நிலையிலும் சுனாமியின் பாதிப்புக்குளான இடம்கள் இன்றுவரைக்கும் அதே நிலையில் தான் இருக்கின்றது .
அந்த வகையில் கிழக்கு மாகாணத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற இடமான மட்டக்களப்பு நாவலடி கிராமமானது ஒரு புறம் கடல் மறுபுறம் வாவியல் சூழப் பெற்ற ஒரு அழகிய கிராமம் என்று அனைவராலும் கவரப் பட்ட கிராமமாக சுனாமிக்கு முன் திகழ்ந்தது .
துள்ளி விளையாடிய சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைக்கும் ஒரு நொடி கணப் பொழுதில் கழுவிய கடல் கடல் தாயை நம்பியே இம் மக்கள் கடலூக்ம் வாவிக்கும் நடுவில் வாழ்ந்து வந்தார்கள்
அது மட்டுமின்றி இலங்கையின் முக்கிய தொழிலான மீன் பிடித் தொழிலையே மிகவும் கஷ்டத்தின் மத்தியில் மேற்கொண்டு தமது வாழ்வாதா ரத்தை இட்டுச் செல்கின்றனர் .
மேலும் இம் மீனவ மக்களுக்கு எதுவித அரச உதவிகளும் கிடையாமல் இருப்பது வருத்தத்துக்குரிய விடயமாகும்

இலங்கையின் புராதன கலைகளுக்கும் இம் மக்கள் சலித்தவர்கள் அல்ல எந்தவிதமான புராதன நிகழ்வுகளும் இன்றுவரைக்கும் அதற்க்கு மதிப்பளித்து அதை தொன்று தொட்டு கலாச்சாரத்தை வெளிக்கொண்டுவருகின்றனர் .

இன்று 10 கடக்கின்றது அந்த மக்களின் பொருளாதாரம் இன்றுவரைக்கும் எவராலும் சிறந்த முறையில் முனெடுக்கப் படவில்லை என்பது அவர்களின் பாரிய பிரச்சனையாக உள்ளது .
சுனாமிக்கு முன்னைய காலகட்டங்களில் இவ் கிராமத்தில் உள்ள பாடசாலையில் 1000க்கு மேற் பட்ட மாணவர்கள் சிறந்த கல்வியை பெற்று வந்தனர் தற்போது இவ் கிராமத்தில் பாடசாலை யை மீளவும் நடைமுறை படுத்துவதற்கு இயலாத நிலையில் உள்ளனர் .

தங்கது பாடசாலையை மீள நடைமுறை படுத்துவதற்கு இன்றுவரை எந்த விதமான உத விகளும் அற்றவர்களாக உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் அதிக உயிர்களை காவு கொண்ட இடமாக நாவலடி திகழ்ந்து அது மட்டும் அன்றி அன்னை பூவதியின் சமாதியும் அங்குதான் இருக்கின்றது .

இவ்வாறான துயரத்துக்கு மத்தியிலும் சிங்கள பேரினவாத்தின் இராணுவ குடியேற்றங்கள் வருவதற்க்கான அறிகுறிகள் காணப் படுவதாக மக்கள் அச்சத்தில் உள்ளனர் .

கடந்த ஆண்டு இயற்கையின் சீற்றம் அதிகரித்தமையால் கிழக்கின் பல பாகங்களிலும் வெள்ள அனர்த்தம் ஏற்ப்பட்ட போது வெள்ளத்தை கடலுக்கு அனுப்புவதற்காக முன்னால் முதலமைசர் சந்திரகாந்தணினால் இந்த கிராமம் இரண்டாக பிரிக்கப் பட்டது .

கல்லடி புது முகத்து வரதுக்கு ம் நாவலடிக்கும் இடையில் நடுவே வெள்ள நீரை போக்குவதற்கு தனது அதிகாரத்தை பயன்படுத்தி செய்த இந்த வேலை காரணமாக இன்று வரைக்கும் அந்த மக்களின் பாதுகாப்பு கேள்வி குறியாகவே உள்ளது.

இன்று அந்த மக்கள் தங்களது சொந்த கிராமத்தில் உள்ள பாடசாலையை மீள ஆரம்பிப்பதற்கு கூட முடிய நிலையில் உள்ளனர் என்பது அங்குள்ள பணம் படைத்த அரசியல் வாதிகளுக்கு தெரியாது என்பது அம மக்களின் குறையாக உள்ளது.

இன்றைய நாளில் கூட நாவலடி கிராம மக்கள் தங்களது உயிர் உடமை அனைத்தையும் இழந்து கூட தங்களது சொந்த மண்ணில் நின்மதியாக வாழுவதற்கு முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.
கிழக்கில் உள்ள மாஜா ஜால அரசியல் வாதிகளே இவர்களையும் சற்று பாருங்கள் நீங்கள் அனுபவிக்கும் சுக போக வாழ்க்கை இம் மக்களின் பணமாகவும் இருக்கலாம்
« PREV
NEXT »