Latest News

December 27, 2014

மகிந்தவிற்கு கடாபியின் நிலை பதறுகிறார் பசில்…
by admin - 0

லிபியாவின் முன்னாள் அதிபர் முஹம்மர் கடாபி குடும்பத்தைப் போன்றே, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குடும்பத்தையும் இலக்கு வைத்து மேற்குலக நாடுகள் சதித் திட்டங்களை முன்னெடுத்து வருவதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
கடாபி குடும்ப ஆட்சி நடத்தி வருவதாகவும், ஊழல் மோசடிகளில் ஈடுபடுவதாகவுமே குற்றம் சுமத்தப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார். 2011ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் கடாபி வீதியில் வைத்து படுகொலை செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். பலம்பொருந்திய மேற்குலக நாடுகளின் ஊடகங்கள் போலியான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட சில மக்களை திசை திருப்வும் வகையில் மேற்குலக நாடுகளின் ஊடகங்கள் செயற்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். இலங்கையின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்தும் முயற்சிகளை சில நாடுகள் மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
லிபியாவின் பெங்காசி நகரில் 2012ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்க தூதுவர் கிறிஸ் ஸ்டீவன் படுகொலை செய்யப்பட்டமை, மேற்குலக நாடுகளின் அரசாங்கக் கவிழ்ப்பு சூழ்ச்சித்திட்டத்திற்கான ஓர் சிறந்த உதாரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார். மேற்குலக நாடுகள் பிராந்திய வலயத்தின் ஒட்டு மொத்த ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஆட்சி மாற்றத்தை கோரும் தரப்பினர் 2005ம் ஆண்டில் நாடு எதிர்நோக்கிய நெருக்கடி நிலைமைகளை மறந்து விட்டு பேசுவதாகத் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்த ஜனாதிபதி முயற்சித்தபோதிலும் அது வெற்றியளிக்கவில்லை எனவும் அதன் பின்னரே யுத்தம் முன்னெடுக்கப்பட்டது எனவும் பெசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »