Latest News

November 24, 2014

தமிழீழ மண்மீட்புப் போராட்டத்தில் தம் இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்களின் குடும்பத்தினரை மதிப்பளிக்கும் நிகழ்ச்சி நேற்று நவம்பர் 23ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை பிரித்தானியாவில் நடைபெற்றது.
by admin - 0

தமிழீழ மண்மீட்புப் போராட்டத்தில் தம் இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்களின் குடும்பத்தினரை மதிப்பளிக்கும் நிகழ்ச்சி நேற்று நவம்பர் 23ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை பிரித்தானியாவில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி தென்மேற்கு லண்டனில், South Wimbledon, Kingston Road இலுள்ள Merton Hall இலும்,

வடமேற்கு லண்டனில் South Harrow> Malvern Avenue இலுள்ள St Andrew Church Hall இலும் நடைபெற்றது

மாலை 7.30 மணியளவில் மாவீரர் குடும்பத்தினருக்கான மதிப்பளித்தல் நிகழ்ச்சி ஆரம்பமானது.

2001ஆம் ஆண்டு பிப்ரவரித்திங்கள் 11ஆம் நாள் வீரச்சாவடைந்த லெப்ரினன்ட் கேணல் மனோஜ் என்றழைக்கப்பட்ட பாலசிங்கம் வசந்தகுமாரின் சகோதரரான,வடமேற்கு இலண்டன் மாவீரர் பணிகள் செயலகப் பொறுப்பாளர் பாலசிங்கம் கமலநாதன் அவர்கள் பொதுச்சுடரினை ஏற்றி வைத்தார்.

பொதுச்சுடரேற்றப்பட்டதையடுத்து பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் வடமேற்கு லண்டன் பொறுப்பாளர் திரு.கோபி சிவந்தன் அவர்கள் தமிழீழத்தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்

அதனையடுத்து, 2000ஆம் ஆண்டு வீரச்சாவடைந்த 2ஆம் லெப்ரினன்ட் பெரியதம்பி அவர்களின் மகனான வடகிழக்கு இலண்டன் மாவீரர் பணிகள் செயலகப் பொறுப்பாளர் திரு. பிறேம் அவர்கள் ஈகச்சுடரினை ஏற்றி வைத்தார்.

தாய்மண் மீட்கப்படும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் மாவீரர்கள் அமைதியாக உறங்;கும் கல்லறைகளுக்கு மலர்மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்றது.

கப்டன் ஹீரோராஜின் தாயார் திருமதி சியாமளாதேவி சண்முகசுந்தரம்,லெப்ரினன்ட் கோகிலா என்றழைக்கப்பட்ட சின்னத்தம்பி இராசரத்தினத்தின் சகோதரி திருமதி.முருகேசன் புனிதரத்தினம்,லெப்ரினன்ட் வெங்கடேஷ் என்றழைக்கப்பட்ட ஜீவாகரன், லெப்ரினன்ட் கேணல் பாமா என்றழைக்கப்பட்ட சியாமளா ஆகியோரின் தாயார் திருமதி.இரத்தினேஸ்வரி சண்முகசுந்தரம்,

ஈகைப்பேரொளி முருகதாசனின் தாயார் திருமதி.சிறீபுவனேஸ்வரி வர்ணகுலசிங்கம் ஆகியோர் கல்லறைகளுக்கு மலர்மாலை அணிவித்தனர் கல்லறைகளுக்கு மலர்மாலை அணிவித்ததைத் தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது.

தொடர்ந்து, தமிழினம் தலைநிமிர்ந்து வாழவேண்டும் என்பதற்காக தங்கள் இன்னுயிரை உவந்தளித்து, தமிழ்மக்கள் உள்ளங்களில் நிலையாக வாழ்ந்துகொண்டிருக்கும் மாவீரர்களுக்கு மலர்தூவி அனைவரும் வணக்கம் செலுத்தினர் மலர்வணக்கததைத் தொடர்ந்து அடுத்து பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர்

திரு கந்தையாஇராஜமனோகரன் அவர்களின் மதிப்புரையும் போராளி கலைவிழியின் உரையும் இடம்பெற்றன.இந்நிகழ்ச்சியில் தமிழீழ தாய்நாட்டுக்காக தங்களை தற்கொடையாக்கிய மாவீரர்களின் நினைவுகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் மாவீரர்களின் குடும்பத்தினருக்கு மாவீரர் நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டு அவர்கள் மதிப்பளிக்கப்பட்டனர்.

இந்த நினைவுச் சின்னங்களை, பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் திரு கந்தையாஇராஜமனோகரன் அவர்கள் வழங்கினார்.

*****************************************************************************
South Wimbledon, Kingston Road இலுள்ள Merton Hall இல்,

மாலை 7.30 மணியளவில் மாவீரர் குடும்பத்தினருக்கான மதிப்பளித்தல் நிகழ்ச்சி ஆரம்பமானது.தென்மேற்கு இலண்டன் மாவீரர் பணிகள் செயலகப் பொறுப்பாளர் கனகரத்தினம் ஐயா அவர்கள் பொதுச்சுடரினை ஏற்றி வைத்தார்.

பொதுச்சுடரேற்றப்பட்டதையடுத்து பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தென்மேற்கு லண்டன் ஒருங்கிணைப்பாளர் திரு.நவம் அவர்கள் தமிழீழத்தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்

அதனையடுத்து, மாவீரர் லெப். கேணல் வைகுந்தனின் தந்தையார்
திரு. மோகனராஜா அவர்கள் ஈகச்சுடரினை ஏற்றி வைத்தார்.
தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது.

அதனையடுத்து, அடிமைத்தளை அறுத்து தமிழ்மக்கள் வாழ்வில்
ஒளி ஏற்ற வேண்டுமென தங்கள் உயிரை ஆகுதியாக்கி,
என்றும் தமிழ்மக்கள் உள்ளங்களில் ஒளியாக வாழ்ந்து கொண்டிருக்கும் மாவீரர்களுக்கு அனைவரும் மலர்தூவி வணக்கம் செலுத்தினர்

மலர்வணக்கத்தைத் தொடர்ந்து திரு.ச.ச.முத்து அவர்களின் உரையும், திரு.நவம் அவர்களின் மதிப்பரையும் இடம்பெற்றது.

கவிதை நிகழ்ச்சியும் இடம்பெற்றது

இந்நிகழ்ச்சியில் மாவீரரின் நினைவுகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் மாவீரர்களின் அன்பு உறவுகளுக்கு மாவீரர் நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டு அவர்கள் மதிப்பளிக்கப்பட்டனர்.

விழிமடல் மூடித் துயில்கின்ற கண்மணிகளை எண்ணி கலங்கிய விழிகளுடனும் கனத்த இதயங்களுடனும் மாவீரரின் உறவுகள் இந்த இரண்டு நிகழ்ச்சிகளிலும்; கலந்து கொண்டனர்.

தாய்நாட்டின் விடிவுக்காக தங்கள் இன்னுயிரை உவந்தளித்த மாவீரர்களின் பெற்றோர்கள் உள்ளிட்ட அவர்களின் உறவுகள் அனைவரும் மரியாதைக்குரியவர்கள்.;.

தங்கள் பிள்ளைகளை மட்டுமல்லாமல் அனைத்து போராளிகளையும் தங்கள் அன்பினால் அரவணைத்து காத்த மாவீரர் பெற்றோர், மணவாழ்வில் இணைந்து எவ்வளவோ நெருக்கடிகளுக்குள்ளும் தங்கள் துணைகளுக்கு பக்கபலமாக வாழ்ந்த மாவீரர்களின் வாழ்க்கைத்துணைகள், மாவீரர்களின் உயிரின் உருவமான அவர்களின் பிள்ளைச்செல்வங்கள,; மாவீரர்களின் உடன்பிறந்தோர்,உறவுகள் அனைவருமே மதிக்கப்படவேண்டியவர்கள்

எந்த இலக்கை அடைவதற்காக மாவீரர்கள் தங்கள் இன்னுயிரை ஈகம் செய்தார்களே அந்த இலக்கை அடைவதற்காக நாங்கள் எல்லோரும் ஒன்றுபட்டு செயலாற்ற வேண்டும். அவர்கள் நடந்த அடிச்சுவட்டைப் பின்பற்றி போராட்டத்தை உறுதியுடன் முன்னெடுக்கவேண்டும்.

எங்கள் தாய்நாடான தமிழீழத்தை வென்றெடுப்பதற்காக தங்களை தற்கொடைiயாக்கிய மாவீரர்களின் நினைவுகளை நெஞ்சில் நிலைநிறுத்தி ஒன்றுபட்டு போராடுவோம் என உறுதி எடுத்துக்கொள்வோம்


நன்றி  ஈழம் ரஞ்சன்
















« PREV
NEXT »