Latest News

November 06, 2014

இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு இந்திய உடந்தை- ஐநா விசாரனை குழுவிற்கு விஜய் சங்கர் அறிக்கை
by admin - 0

இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு இந்திய உடந்தை- ஐநா விசாரனை குழுவிற்கு விஜய் சங்கர் அறிக்கை

இலங்கையில் நடந்த தமிழின அழிப்பில் இங்கிலாந்து, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பங்குபெற்றிருந்த போதிலும் தொடர்ச்சியாகவும் மிக தொடர்ச்சியான பங்களிப்பை ஆனால் மிகவும் குழப்பகரமான நிலைப்பாடுகளோடு அனுகிய நாடு இந்தியா என நோர்வே நாட்டின் பேர்கன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் விஜய்சங்கர் அசோகன், ஐநா மனித உரிமை ஆணையம் நியமத்திருக்கும் இலங்கை மீதான விசாரனை குழுவிற்கு அறிக்கை சமர்பித்துள்ளார். 2008 முதல் நோர்வேயில் இயற்பியல் ஆய்வுகளை மேற்கொண்டு வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த விஜய் சங்கர், தனது அறிக்கையில் திரு. கு.ராமக்கிருஷ்ணன் அவர்கள் இந்தியாவின் ராணுவ உதவி செய்ததை சாட்சியமாக எழுதிய கடிதத்தையும் உள்ளடக்கி சமாதான பேச்சுவார்த்தையின் பொழுது தரகராக செயல்பட்ட எரிக் சொல்கைமின் மேடைப் பேச்சுக்கள் மற்றும் பல்வேறு ஆவணங்களையும் சேர்த்து ஆய்வு செய்து இந்தியாவின் தமிழின அழிப்பின் பங்களிப்பு தொடர்பாக உறுதி செய்துள்ளார்.

ஐநா மனித உரிமை ஆணையத்தின் இலங்கைக்கான விசாரணை குழுவிற்கு விஜய் அசோகம் அனுப்பிய அறிக்கையின் சுறுக்க வடிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது: “நோர்வேயில் 2008 ஆம் ஆண்டு முதல் வசித்து வருகிறேன். இலங்கையில் நான் பிறந்த நாடான இந்தியா எல்லா வகையிலுமான பங்களிப்பை செய்து வருகிறது என தெரிந்த இருந்த நிலையில், இலங்கைக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை தரகராக நோர்வே செயல்பட்டதையும் நன்கு அறிந்திருந்த என்னை, 2008-2009 ஆம் ஆண்டு நடந்த நோர்வே நாட்டு இளையோர்களின் போராட்டம் பெரிதும் ஈர்த்தது. அதிலிருந்து தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்பாகவும் இந்தியாவின் நேரடி மறைமுக பங்களிப்பு தொடர்பாகவும் ஆய்வுகளை மேற்கொள்ள தொடங்கினேன்.

போரின் இறுதி காலமான 2008-2009 இல், இந்தியா உட்பட்ட ஏகாதிபத்திய நாடுகள் தமிழின அழிப்பை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருந்த வேளையில், Dr. Francis Boyle (Professor, International law, llinois University,USA), ஐக்கிய நாடுகளின் பாதுக்காப்பு சபையில் நடைமுறையில் இருந்த சட்ட வடிவத்தை மேற்கோள் காட்டி, இலங்கையில் நடக்கும் போரை நிறுத்த உடனடியாக பாதுகாப்பு சபை கூட்டத்தை கூட்ட அழைப்பு விடுத்தார். அவ்வறிக்கையில் இந்தியாவும் , அமெரிக்கா, பிரான்ஸ் , ஐக்கிய அரசாட்சி நாடுகளின் கள்ள மெளனத்தை கடுமையாக சாடியிருந்தார். மேலும் அவர், ஐநா அவை அட்டவணை பிரிவு 35-ன் கீழ் இந்தியாவிற்கு இருக்கும் கடமைய மேற்கோள் காட்டி, உடனடி போர் நிறுத்தத்திற்கான கூட்டத்தை கூட்ட வலியுறுத்தினார். வன்னயில் GoSL's நடத்தும் இனபடுகொலையை முற்றிலுமாக நிறுத்தவேண்டும் என்று இந்திய அந்த கூட்டத்தில் சொல்லவேண்டும் என்று அவர் இந்தியாவிற்கு வேண்டுகோள் விதித்தார்..

இந்தியா நடந்துக்கொண்டிருந்த இனப்படுகொலைக்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை -உலகநாடுகளின் அழுத்தத்தையும் கண்டு கொள்ளாமல் நடித்து வந்தது. ஏன் என்ற கேள்விக்கான விடையாக போரின் இறுதியில் ராஜபக்சேவின் இந்திய ஊடகம் ஒன்றிற்கான பேட்டி அமைந்தது. மஹிந்த ராஜபக்சே மே 29.2009,இல் ஹிந்துஸ்தான் டைம்ஸ் இல் கூறுகையில் "நான் இந்தியவின் போரை நடத்தினேன்" என்று கூறினார். இந்தியா நேரடியாக இலங்கையுடன் சேர்ந்து போரில் தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்கத் திட்டம் தீட்டியது என்பது இதன்வாயிலாக தெரிகிறது .

இவ்வறிக்கையில், நான் (விஜய் அசோகன்) கோவை ராமகிருஷ்ணன் (பொதுச்செயலாளர், தந்தை பெரியார் திராவிடர் கழகம்) தனது சாட்சியமாக எனக்கு ஒரு மின்னஞ்சலை இருந்தவற்றை இணைத்துள்ளேன்.

“2007 இல் 10 இற்கும் மேற்பட்ட இலங்கை ராணுவத்திற்கு கோயம்பத்தூரில் இருக்கும் குருடம்பாளையம் என்ற இடத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. அந்த சமயம் தமிழ்நாட்டில் பல அரசியல் கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைஅடுத்து அந்த பயிற்சிமுகம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. பின் இந்திய இலங்கையின் வான்படை அதிகாரிகள் கோயம்பத்தூரில் உள்ள சூளூர் விமான பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற வந்தனர். தமிழக அரசியல் கட்சிகளின் போராட்டத்திற்கும் பிறகு வேறு மாநிலத்திற்கு மாற்றப்பட்டனர். அடுத்ததாக, வெல்லிங்டனில் இராணுவ பயிற்சி அளிக்கப்பட்டது. DSSC -இல் சிறீலங்கா இலங்கை பயிற்சிபெற்றது. கடுமையான எதிர்ப்பு போராட்டத்திற்கு பின் மறுபடியும் பயிற்சியை வேறு இடம் மாற்றினார்கள். மே 2 ஆம் நாள், 82 கனரக வாகனத்தில் இராணுவ தளவாடங்களை விசாகப்பட்டினத்தில் இருந்து கோயம்பத்தூர் வழியே கொச்சின் எடுத்துச்செல்லப்படுவதாகவும் அங்கிருந்து கொழும்பிற்கு கப்பல் வழியே ஏற்றப்பட இருப்பதையும் அறிந்த நாங்கள், அதனை வழியில் தடுத்து நிறுத்த முற்பட்டோம். மே 2 ஆம் நாள் மதியம் 3 மணி அளவில் நீலாம்பூரில் 300ற்கும் மேற்பட்டவர்கள் ஒன்றிணைந்து இராணுவ வண்டிகளை தடுத்து நிறுத்தினோம். அதில் இருந்த ஆயுதங்களை தோழர்கள் பத்திரிக்கைகளுக்கும் தொலைக்காட்சிகளுக்கும் காட்டினார்கள். நாங்கள் அனைவரும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டோம்” என்று அம்மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்திய வின் முன்னால் பிரதமர் மன்மோகன் சிங், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விற்கு எழுதிய கடிதத்தில் "இலங்கையின் இறையாண்மையையும் , ஒறுமைப்பாடையும் காக்கவே ஆயுதங்கள் தரப்படுகிறது” என்று கூறியது இங்கு மேலும் குறிப்பிடப்பட்டது" 1980களில் பிராந்திய தலைமைத்துவத்திற்கு வரத்துடித்த இந்திய அரசு இலங்கையில் தனது ஆதிக்கத்தை செலுத்த அங்கு நிலவி வந்த இன மோதலை பயன்படுத்திக்கொண்டது. முதலில், இலங்கையின் நிலைத்தன்மையை சீர்குலைத்து தனது மேலாண்மையை நிலைநிறுத்தவே முதலில் திட்டமிடப்பட்டது. முதலில் தமிழர் ஆயுதக்குழுக்கள் அனைத்திற்கும் ஆயுத பயிற்சியும் ஆயுத உதவியும் வழங்கியது. இந்திரா காந்தியின் மரணத்திற்கு பின்பான சூழலில் ராஜீவ் காந்தியின் அனுபவமற்றத் தன்மை, இந்தியாவை பிழையான முடிவெடுக்க வைத்தது. இன மோதல்கள் தொடர்பான எவ்வித அனுபவமும் இல்லாத இந்தியா செயல்படுத்திய திட்டங்கள் அனைத்தும் பிழையாகவே முடிய, தமிழரின் அரசியல் போராட்டத்தை அப்பிராந்தியந்தியத்தில் தவறான கண்ணோட்டத்திற்கு அழைத்து சென்றது இந்தியா.

1991 ஆம் ஆண்டு ராஜீவ் படுகொலைக்கு பிறகு இலங்கை தொடர்பில் ஆர்வமில்லாதது போல காட்டிக்கொண்டாலும், இலங்கையுடனான வர்த்தக, ராஜதந்திர உறவுகளை பேணிக்காத்தது. 2000 ஆண்டில் INS Sarayu என்ற நவீன போர்க்கப்பலை வழங்கிய இந்தியா விமான தளபதில் டிப்னிஸையும் இலங்கைக்கு அனுப்பி வைத்து, அங்கு அன்றைய நாளில் இருந்த அசாதாரண சூழலை கண்காணித்து வரச்செயதது. 2002 ஆம் ஆண்டு முதல் சமாதானம் காலம் நெடுகிலும் இந்தியா தனது பிடியை வைத்திருந்தது. சமாதான இடைத்தரகாராக இருந்த எரிக் சொல்கைம் இதனை பல்வேறு இடங்களில் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவ மற்றும் அரசியல் ஆய்வாளரான சூரிய நாராயணன், 2004 ஆம் ஆண்டு புலிகளின் வளர்ச்சி தொடர்பாகவும் குறிப்பாக கடற்புலிகளின் மேலாண்மை தொடர்பாகவும் கட்டுரை எழுதி அவ்வமைப்பிப் வளர்ச்சி இந்தியாவின் பாதுகாப்பிற்கு பெரிய ஆபத்து என குறிப்பிட்டார். அதன்பிறகு, CGS Varaha மற்றும் CGS Vigraha கப்பல்கள் இலங்கைக்கு இந்தியா வழங்குகிறது. சென்னையில் நிலைநிறுத்தப்பட்டிருந்த அக்கப்பல்கள் விசாகப்பட்டினம் எடுத்துச்செல்லப்பட்டு இலங்கைக்கு வழங்குகிறது. தமிழக ஊடகங்கள் மற்றும் அரசியல்வாதிகளின் பார்வைக்கு அப்பாற்பட்டு நடக்கவே இதனை இந்தியா திட்டமிட்டு செய்திருக்கிறது. 2006 ஆம் ஆண்டு முதல் 2007 வரை புலிகளின் கடல் போக்குவரத்து முற்றிலும் தடுக்கப்படுவதோடு புலிகளின் ஆயுதம் தாங்கிய கப்பல்கள் அழிக்கப்படுகிறது. இதற்கான உதவியை இந்தியாதான் புரிந்தது என ரணில் விக்ரமசிங்கே 2009 டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் கூறியிருந்தார்” அவ்வறிக்கையில் விஜய் அசோகன் மேலும், ”இலங்கையின் கப்பல் படை தளபதி வசந்த கரணகோடா இந்தியா எவ்வாறெல்லாம் தங்களது கப்பல் படையை மேம்படுத்தவும் கடற்படை செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் உதவி புரிந்தது என பல்வேறு இடங்களில் கூறியவைகளையும் தொகுத்து இந்தியாவின் திட்டமிடலை அம்பலப்படுத்தியிருந்தார்.”

இந்தியாவின் NDTV தொலைக்காட்சியின் இராணுவ ஆய்வாளர் நிதின் கோகலேவின் “Sri Lanka – From War to Peace” புத்தகத்தில் உள்ளவைகளையும் சாட்சியாக பயன்படுத்தி இந்தியா 2002 முதல் 2009 வரை செய்த அனைத்து உதவிகளையும் மேற்கோள்களுடன் எழுந்தியிருந்தார். 2009 இல் போர் முடிந்த பிறகு கோத்தபாய ராஜபக்சே Indian Defence Review சஞ்சிகைக்கு வழங்கிய செவ்வி மற்றும் லலித் வீரதுங்கே டெய்லி மிர்ரருக்கு வழங்கிய செவ்வியையும் சாட்சிக்கு உட்படுத்திய விஜய் அசோகன் இந்தியாவின் பங்களிப்பை விரிவாக ஐநா மனித உரிமை அமைப்பிற்கு அனுப்பிய அறிக்கையில் எழுதியிருந்தார். மேலும் தனது இறுதியாக இந்தியாவின் பங்களிப்பு தொடர்பாக “1. இந்தியா இனவழிப்பு நடக்க ஏதுவான சர்வதேச சூழலை உருவாக்கியதோடு இராணுவ மற்றும் ராஜதந்திர உதவிகளை இலங்கைக்கு முழுமையாக வழங்கியது. சமாதான பேச்சுவார்த்தையின் பொழுது சம பலத்தில் இருந்த புலிகளின் தரப்பை பலமிழக்க செய்ய இந்தியா பெரிதும் வேலை செய்தது.

2) சர்வதேச சட்டங்கள் மற்றும் நடைமுறைகளின் படி இனவழிப்பை தடுக்கும் வல்லமையும் சூழலும் இந்தியாவிற்கு ஆனால் அதனை தடுக்காமல் விட்டதும் இந்தியா இனவழிப்பில் பங்குதாராக இருந்தது என கொள்ளலாம்..

3) போரின் பொழுது எழுந்த சர்வதேச அழுத்தங்களை குறைத்து இலங்கைக்கு எவ்வித அழுத்தமும் வராமல் பார்த்துக்கொண்டு இலங்கையை அரவணைத்து சென்றது இந்தியா” என அவ்வறிக்கையின் இறுதி வடிவமாக எழுதியுள்ளார் விஜய் அசோகன்.

நன்றி - பதிவு இணையம்
« PREV
NEXT »

No comments