Latest News

November 26, 2014

புலனாய்வாளர்கள் நெருக்கடியையும் மீறி பாடசாலைகளில் மாவீரர் தின பிரசுரங்களை போட்டது யார்? குழப்பத்தில் படையினர்!
by admin - 0

தமிழீழ மாவீரர் நாள் நாளைய தினம் உலகம் முழுவதும் அனுட்டிக்கப்படவுள்ள நிலையில் வடகிழக்கு மாகாணங்களில் படையினர் மற்றும் படைப் புலனாய்வாளர்களின் கடுமையான நெருக்குவாரங்கள் மத்தியில் இன்றைய தினம் யாழ்.குடாநாட்டின் பாடசாலைகள் சிலவற்றில் மாவீரர் தின பிரசுரங்கள் போடப்பட்டுள்ளது.யாழ்.குடாநாட்டின் சகல வீதிகள் மற்றும் பொது இடங்களில் போர்க்கால நிலைமையினை ஒத்ததாக படையினர் மற்றும் புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்.இந்துக் கல்லூரி உள்ளிட்ட பல பாடசாலைகளில் மாவீரர்களை நினைவில் கொள்ளும் வகையிலான பிரசுரங்கள், இன்றைய தினம் அதிகாலையிலேயே போடப்பட்டுள்ளது.

பாடசாலைகளில் ஆண்டு இறுதிப் பரீட்சைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் பாடசாலைக்கு வந்த அதிபர் ஆசிரியர்கள் குறித்த பிரசுரங்களை மீட்டுள்ளதுடன், படையினருக்கும் விடயத்தை தெரியப்படுத்தியிருக்கின்றனர்.

இதனையடுத்து குறித்த பிரசுரங்களை மீட்ட படையினர் அவற்றை தாமே கொண்டு சென்றதுடன், பாடசாலையில் நடைபெற்ற பரீட்சை நடவடிக்கைகளை குழப்பாத வகையில் சோதனைகளை நடத்தியதாகவும் அதிபர்கள் தெரிவித்துள்ளனர். 


எனினும் அதிகாலையில் குறித்த பிரசுரங்களை போட்டவர்கள் யார்? படையினரின் நடமாட்டம் மற்றும் சோதனைகள் அதிகமாகவுள்ள நிலையிலும் எவ்வாறு பிரசுரங்களை கொண்டு வந்தனர். என்பன போன்ற கேள்விகளுக்குப் பதில் கிடைக்காத நிலையில், இன்றைய தினம் மதியம் தொடக்கம் யாழ் நகர் பகுதியில் உள்ள உயர்தர வகுப்பு பாடசாலைகளுக்கு அருகிலும் படையினர் நிலைகொண்டுள்ளமையினை காணமுடிந்தது.
« PREV
NEXT »

No comments