Latest News

November 20, 2014

தமிழர் நிலம் பறிபோகுது- மாதகலில் காணி அளவீடு
by admin - 0


யாழ்ப்பாணம் மாதகல் ஜோதிப் புலம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான 4.5 ஏக்கர் காணி கடற்படையினரின் தேவைக்காக சுவீகரிக்கும் வகையில் நேற்று அளவீடு செய்யப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் போலிப் பிரசாரங்களை மேற்கொண்டு பொது மக்களின் காணிகள் பாதுகாப்பு படையினரின் தேவைக்காக சுவீகரிக்கப்படுவதாக மக்கள் பிரதிநிதிகளும், சிவில் சமூகப் பிரதிநிதிகளும் தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாணம் மாதகல் ஜோதிப்புலம் பகுதியில் உள்ள 4.2 ஏக்கர் காணியை அளவீடு செய்வதற்காக நில அளவீட்டுத் திணைக்கள அதிகாரிகள் குழுவினர் நேற்று முற்பகல் 10 மணியளவில் சென்றிருந்தனர்.

இக் காணியில் ஏற்கெனவே கடற்படை முகாம் அமைந்துள்ளமை குறிபிடத்தக்கதாகும்.

காணியை அளவீடு செய்வதற்கு காணியின் உரிமையாளர் சம்மதம் தெரிவித்த மையால் தடைகள் இன்றி அதிகாரிகள் தமது பணிகளை முன்னெடுத்தனர்.

காணி அளவீட்டுப் பணிகள் முன்னெடு க்கப்பட்ட ஜோதிபுலம் பகுதிக்கு வலி வடக்கு மீள்குடியேற்றக்  குழு தலைவர் எஸ்.சஜீவன், வலி வடக்கு பிரதேச சபைத் தலைவர் எஸ்.சுகிர்தன், வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோர் சென்றிருந்தனர்.

மாதகல் ஜோதிப்புலம் பகுதியில்  முன்னெடுக்கப்பட்ட காணி அளவீட்டுப் பணிகள் தொடர்பில் கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவிக் கையில்.

காங்கேசன்துறை துறைமுகத்தின் பாதுகாப்பிற்காகவே இந்த காணி சுவீகரிக்கப்ப டுவதாக அவர் தெரிவித்தார்.

உரிய சட்ட நடைமுறைக்கு அமையவே இந்த காணி சுவீகரிப்புப் பணிகள் இடம் பெறு வதாக குறிப்பிட்ட கடற்படைப் பேச்சாளர்.

எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் பலவந்தமாக காணிகள் கைப்பற்றப்படுவதில்லை என கூறினார்.

« PREV
NEXT »

No comments