Latest News

November 21, 2014

அம்பாறை கல்முனைக் கிராம பெயர்ப்பலகை அகற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு
by admin - 0

அம்பாறை கல்முனைக் கிராம பெயர்ப்பலகை அகற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு! 

அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த கல்முனைக் கிராமத்தின் தென் எல்லைப் பெயர்ப்பலகை அகற்றப்பட்டு வேறோர் இடத்திற்கு மாற்றப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அம்பாறை மாவட்ட தமிழர் மகா சங்கம் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்ததாவது..

கல்முனைக் கிராமத்தின் தென் எல்லைப் பெயர்ப்பலகை தரவைப்பிள்ளையார் கோயில் வீதியில் ஆரம்ப காலத்தில் இருந்து வந்தது.கொங்கிறிட்டால் உருவாக்கப்பட்ட இந்தப் பெயர்ப் பலகை அவ்விடத்தில் இருந்து ஒரு மைல் தூரத்திற்கு தெற்குப் பக்கமாக சாகிராக் கல்லூரி மகளீர் மகா வித்தியாலய எதிரில் உள்ள பிரதான வீதியில் அமைந்திருக்கும் அன்வர் எரிபொருள் நிலையத்திற்கு முன்னால் மாற்றப்பட்டுள்ளது.

அதாவது 100% முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் முழுக் கல்முனைக்குடி அரைவாசி சாய்ந்த மருது கிராமங்களையும் உள்ளடக்கிவிட்டது போல் இந்தப் பெயர்ப்பலகை மாற்றப்பட்டுள்ளது.

கிராம வரைபடத்தின் படி கல்முனை நூறு வீதம் தமிழ் மக்கள் செறிந்து வாழும் கிராமமாகும்.ஆரம்ப காலத்தில் இருந்து இங்கு தமிழ் மக்களே வாழ்ந்துள்ளனர்.நிரந்தரமாக முஸ்லிம் ஒருவரும் இருந்ததில்லை.

சட்டமுறையற்று இப்பெயர்ப் பலகை மாற்றப்பட்டமையானது தமிழ்க் கிராமமான கல்முனையில் முஸ்லிம்களும் வாழ்ந்து வருகின்றனர் என்ற கருத்தை வெளிப்படுத்துவது ஆகும்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விடயத்தில் நியாயமான தீர்வினைப் பெற்றுத்தரும்படி கேட்டுக்கொள்கிறோம் என்றுள்ளது.

« PREV
NEXT »

No comments