Latest News

November 06, 2014

பின்லேடன் சுட்டு கொலை முதல் முதலாக வெளிச்சத்துக்கு வந்த சீல்...
by admin - 0

உலகையே நடுங்க வைத்துக்கொண்டிருந்த ஒசாமா பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டதில் ஏகப்பட்ட மர்மங்கள் இன்னும் விலகாமல் உள்ளன.  கடந்த 2001ல் அமெரிக்காவில்,  நியூயார்க் நகரில்  இரட்டை கோபுர உலக வர்த்தக மைய கட்டிடம் மீது விமானம் மூலம் மோதி தாக்குதல் நடத்த்பட்டது. இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இந்த கொடூர தாக்குதல்களுக்கு காரணமாக விளங்கிய அல்கய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடனை அமெரிக்கா பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத்தில் 2011 மே மாதம் சுட்டு கொன்றது. 

40 நிமிடத்தில் அமெரிக்க சீல் சிறப்பு கடற்படையினர், தங்கள் காரியத்தை கச்சிதமாக முடித்தனர்.பின்லேடனை கொல்ல அமெரிக்கா அனுப்பிய அதிரடிப்படை கடற்படையை சேர்ந்த சீல் 6 என்ற பிரிவை சேர்ந்தது. ஐந்து ஹெலிகாப்டர்களில் 79 பேர் அபோதாபாத் தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டனர். 

பின்லேடனை பார்த்த கணமே, யார் முதலில் சுடுவது என்று நினைக்காமல், அங்கு நுழைந்த மூன்று வீரர்களில் ஒருவர் டுமீல் என்று சுட, அடுத்த நொடிகளில் 5  குண்டுகள் பாய்ந்தன. நெற்றி, மார்பு பகுதியை குண்டுகள் துளைத்தபடி, பின்லேடன் ரத்த வெள்ளத்தில் சரிந்து பிணமானார்.

சீல் 6  அதிரடிப்படையில் பணியாற்றிய ராப் ஓ நீல், 38 என்பவர் தற்போது வெளிச்சத்திற்கு வந்து உள்ளார். பின் லேடனை முதலில் பார்த்து சுட்ட நபர்களில் இவரும் ஒருவர். இவர் மிகவும் அருகில் இருந்து பிலேடனை தலையில் 3 முறை சுட்டு உள்ளார். பின்லேடனை சுட்டு கொன்ற பிறகு அமெரிக்க அதிபர் ஒபாமா,  ராப் ஓ நீலுக்கு தனிப்பட்ட முறையில் வாழ்த்து தெரிவித்தார். ராப் ஓ நீல் 400 க்கும் மேறபட்ட போர் நடவடிக்கைகளில் கலந்து கொண்டு உள்ளார்.  16 வருடங்களாக சீல் படையின் உறுப்பினராக உள்ளார். ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் போர் பகுதிகளிலும் இவர் பணியாற்றி உள்ளார்.இந்த படையின் புகழ் பெற்ற உறுப்பினர்களில் இவரும் ஒருவர். ஆனால் தற்போது இந்த அதிரடி வேட்டை குறித்து பொது இடங்களில் பேசுவது கிடையாது.
« PREV
NEXT »

No comments