Latest News

November 22, 2014

கோத்தாவின் ஆட்டம் ஆரம்பம்-மைத்திரிபாலவின் சகோதரர் டட்லி சிறிசேன கைது!
by admin - 0


பிரதான கோடீஸ்வரரும் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்திரிபாலவின் சகோதரருமான டட்லி சிறிசேனவை இரகசியப் பொலிசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பொலன்னறுவை மாவட்டத்திற்கு இன்று காலை விரைந்திருந்த இரகசியப்பொலிசார், டட்லி சிறிசேனவை கைது செய்து கொழும்புக்கு அழைத்து வந்து கொண்டிருப்பதாகவும் குறித்த தகவல் தெரிவிக்கின்றது. அரலிய ரக சம்பா அரிசி ஆலை உரிமையாளரான இவர் கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் வரை அரசாங்கத்தின் செல்லப்பிள்ளையாக இருந்தார்.

இவர் நினைத்த நேரத்தில் இலங்கை முழுவதும் அரிசியின் விலையை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை ராஜபக்ஷவினர் இவருக்கு வழங்கியிருந்தனர். இதற்கு அரிசி ஆலை உரிமையாளர்களிடமிருந்து மாதமொன்றுக்கு 200 கோடி ரூபா கப்பமாக ராஜபக்ஷவினருக்கு வழங்கப்பட்டு வந்தது.


மைத்திரிபால சிறிசேன கட்சி தாவும் தகவல் கிடைத்தவுடன் டட்லி ஊடாகவே அவரைத் தடுத்து நிறுத்தும் பலத்த முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டிருந்தது. அதற்காக அவருக்கு கடந்த வாரம் வெளிநாட்டு உல்லாச சுற்றுலா ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் அரசாங்கத்தின் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்த நிலையில். டட்லி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

அரிசி மொத்த உற்பத்தி மற்றும் விற்பனையில் மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக இவர் மீது குற்றம் சுமத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் இரண்டொரு வாரங்களுக்குள்ளாக அரலிய சம்பா அரிசி விற்பனை முற்றாக முடக்கி விடுவதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.


« PREV
NEXT »

No comments