Latest News

November 18, 2014

ஆளும் கூட்டணியில் இருந்து விலகுவதாக ஜாதிக ஹெல உறுமய அறிவிப்பு!
by Unknown - 0

மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் வகித்து வந்த அமைச்சு பதவிகளை இராஜினாமா செய்ய முடிவெடுத்திருப்பதாக ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜாதிக ஹெல உறுமய கட்சி அறிவித்துள்ளது.
இதன்படி விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க உட்பட மேல் மாகாண விவசாய அமைச்சர் உதய கம்மன்பில ஆகியோர் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினமா செய்வதற்கு முடிவெடுத்திருப்பதாக அந்தக் கட்சி கொழும்பில் நடத்திய ஊடக சந்திப்பொன்றின் போது அறிவித்தது.
இங்கு உரையாற்றிய ஜாதிக ஹெல உறுமய கட்சியின் செயலாளர் பாட்டளி சம்பிக்க ரணவக்க " நிறைவேற்று அதிகாரங்கள் கொண்ட ஜனாதிபதி முறையை இரத்து செய்து அந்த அதிகாரங்களை நாடாளுமன்றத்திடம் சமர்ப்பிக்குமாறு எமது கட்சி நாடாளுமன்றத்திட்கு சட்ட முலமொன்றை சமர்ப்பித்துள்ள போதிலும் அதனை நடைமுறை படுத்த முடியாதென அரசாங்கம் அறிவித்துள்ளது", என்றார்.
மேலும் அவர் கூறுகையில், நீதிமன்ற சுதந்திரத்தை பலப்படுத்துவது மற்றும் ஊழல் மோசடிகளை ஒழிப்பதற்கு தேவையான சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு தனது கட்சி வேண்டுகோள் விடுத்ததாகக் கூறிய சம்பிக்க ரணவக்க இதனை அமல் படுத்துவதை தவிர்த்து திடீரென ஜனாதிபதி தேர்தலொன்றை நடத்த அரசாங்கம் தீர்மானித்ததாகக் குற்றம் சாட்டினார்.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பு சம்பந்தப்பட்ட சட்ட திருத்தங்களை மேட்கொல்லுமாறு நாம் வேண்டுகோள் விடுத்தபோதிலும் அரசாங்கம் எமது வேண்டுகோளை நிராகரித்துலதாகவும் கூறினார் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் செயலாளர் சம்பிக்க ரணவக்க.
"இந்த நிலையில் எமக்கு மேலும் அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்க முடியாது. இதன் காரணமாகவே நாம் அமைச்சு பதவிகளை இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்தோம்", என்று கூறினார் சம்பிக்க ரணவக்க.
ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பிரதி செயலாளரும் மேல மாகான அமைச்சருமான உதய கமன்பில , அரசாங்கம் மேற்கொண்டு வரும் தவறுகளை அரசாங்கத்துக்குள் இருந்து கொண்டே திருத்துவதற்கு தனது கட்சி முயற்சிகளை மேற்கொண்டதாகவும், ஆயினும் அந்த முயற்சிகள் தோல்வியடைந்தாகவும் தெரிவித்தார்.
ஜனநாயகத்தைக் கட்டி எழுப்புவதற்கு தேவையான சட்ட திருத்தங்களை மேற்கொள்வதற்காக, ஆளும் கட்சியில் இருக்கும் குழுக்கள் உட்பட எதிர்க் கட்சிகள், சிவில் சமுக அமைப்புக்களுடன் ஒன்றுபட்டு செயல்பட, தனது கட்சி தீர்மானித்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
« PREV
NEXT »