Latest News

October 15, 2014

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த யுவதி ஒருவரின் புகைப்படமும் அவரைப்பற்றிய தவறான செய்தியும்
by admin - 0

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த யுவதி ஒருவரின் புகைப்படமும் அவரைப்பற்றிய தவறான செய்தியும் 3இணையத்தளங்களில் வெளிவந்ததால் அந்த யுவதி பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார். 
இந்த யுவதி வேலை செய்யும் நிறுவனத்தின் அதிகாரிகள் நல்ல மாதிரி யுவதியை சொல்லி இருக்கின்றார்கள் . ஊரில் நல்ல பெயர் கொண்ட அந்த யுவதியின் புகைப்படம் 2013ம் ஆண்டு எடுக்கப்பட்டுள்ளது அப் புகைப்படத்தில் உள்ள உடையுடன் கடந்த வருடம் கார்த்திகை மாதம் ஒரே ஒரு தடவையே பஸ்சிற்காக காத்திருந்ததாக அந்த யுவதி தெரிவித்துள்ளார்


3இணையத்தளங்களிலும் வெளிவந்த இந்த யுவதி சம்பந்தமான செய்தி ஆதாரமற்றது என்பது செய்தி முறையிலும் செய்திப் புகைப்பட முறையிலும் தெட்டத் தெளிவாகத் தெரிகின்றது.

பேருந்துக்காக காத்திருப்பவர்களையும்,புங்காக்களிலும் பொது இடங்களிலும் நிற்கும் இளைஞர் யுவதிகளை படம் பிடித்து விபச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள் என்று எப்படி ஆதாரமாக செய்தி வெளியிட முடியும்.யாழில்விபச்சாரங்கள் இடம்பெறுவதாக செய்திகள் வெளிவந்தாலும் அந்த இடங்களை கண்டு பிடித்து அதனை செய்பவர்களை இனங்கண்டு செய்தியை வெளியிட்டால் அது செய்தி முறைக்கு நற்சான்றைத் தரும்.

சில நிலையங்களில் விபச்சாரம் இடம் பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது ஆனால் அந்த இடங்களை நெருங்க முடியாது ,நெருங்கினால் அவர்களின் பின்னனி பற்றி அறிந்தும் அறியாமலும் இருந்து கொண்டு யாழில் விபச்சாரம் என்ற செய்தியை பொய்யாக பிரசுரிக்க முடியுமா?

இந்த யுவதியின் பொய் செய்தியை பிரசுரித்த ஒரு இணையத்தளம் அரச ஆடு தாளத்திற்கு இயங்கும் இணையத்தளமாகும்.

எமது மக்களின் பிரச்சினைகள் இராணுவத்தினரால் அதிகரித்துக் கொண்டு செல்லும் போது அது சம்பந்தமாக ஒரு செய்தியையேனும் பிரசுரிக்க பின்னிற்கும் இந்த இணையத்தளம் இப்படியான பொய்யான செய்தியை பிரசுரித்து தமது இணையத்தளத்தை பார்க்கச் செய்பவர்களை கூட்டலாம் என நினைக்கின்றது.
எனவே மக்களின் பிரச்சினைகள் பல இருக்கின்றன துணிவிருந்தால் இந்த செய்திகளை முதலில் பிரசுரியுங்கள்.விபச்சாரச் செய்தியெனில் அது இடம் பெறும் இடங்களை கண்டு பிடித்து அதை இயக்குபவர்களை வெளிப்படுத்துங்கள். இதனை விட்டு விட்டு யுவதியோ ஒரு இளைஞனுடன் பேசிக் கொண்டிருப்பதையும், பஸ்தரிப்பிடத்தில் பஸ்சிற்காக தனிமையில் காத்திருக்கும் யுவதியையும் படம் பிடித்துவிட்டு விபச்சாரம் என்று பொய் செய்தியை பிரசுரிக்காதீர்கள்.
« PREV
NEXT »

No comments