Latest News

October 17, 2014

ஓவர் பேச்சு... தலைமை நீதிபதியிடம் 'குட்டு' வாங்கிய சு.சுவாமி!! ஜெ. ஜாமீன் வழக்கில் ருசிகரம்!!
by admin - 0


சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தத்து பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமியிடம் கிடுக்குப் பிடி கேள்விகளைக் கேட்க மனிதர் ஆடிப்போய்விட்டார். சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் அனைவரும் ஜாமீன் மனுத்தாக்கல் செய்தனர். ஆனால் அம்மனு நிராகரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் நான்கு பேரும் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து தலைமையிலான பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது நடைபெற்ற விவாத விவரம்: ஜெயலலிதாவின் வழக்கறிஞர் நாரிமன் தனது வாதங்களை முன்வைத்து வாதாடினார். 

அவரது வாதங்களுக்கு குறுகிட்டு தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியும் கருத்து தெரிவித்தும் வந்தார். பின்னர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கின் புகார்தாரர் என்ற அடிப்படையில் சுப்பிரமணிய சுவாமி கருத்து தெரிவிக்க அனுமதிக்கப்பட்டது. 

அப்போது சுப்பிரமணியன் சுவாமி , தமிழகத்தில் மிகப் பெரிய வன்முறை வெடித்துள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக கேலிசித்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவுகிறது. அதனால் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் தரக் கூடாது. ஜெயலலிதா இந்த வன்முறைகளைக் கட்டுப்படுத்தவில்லை. அவர் ஒருவார்த்தை கூறியிருந்தால் போதும்.. ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. ஒட்டுமொத்த அமைச்சரவையுமே கர்நாடகாவுக்கு வந்துவிட்டது.. அவரது அமைச்சர்கள் எவருமே அழாமல் பதவியும் ஏற்கவில்லை என்றார். 

இதன் பின்னர் இதற்கு பதிலளியுங்கள் என்கிற விவதமாக ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் நாரிமன் பக்கம் தலைமை நீதிபதி தத்து திரும்பினார். "இந்த நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட விவரங்கள் அனைத்தும் அவர்களுக்குத் தெரிவிக்கப்படும். 

கட்சியினருக்கு ஜெயலலிதா உத்தரவு பிறப்பிப்பார். அவர் அரசியல் தார்மீக நடைமுறைகளை நிச்சயம் கடைபிடிப்பார் என உறுதி கூறுகிறேன் என்றார் நாரிமன். 

இதனைத் தொடர்ந்து சுப்பிரமணியமணி சுவாமி பக்கம் திரும்பிய தத்து நன்றாக குட்டு வைத்தார். சுப்பிரமணியன் சுவாமியைப் பார்த்தபடி, "ஒரு நபர் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட பின்னர் நாட்டை விட்டு ஓட முயற்சித்தால் மட்டுமே அசாதாரண சூழ்நிலையாக கருதப்படும். ஜெயலலிதாவின் கட்சித் தொண்டர்கள் அப்படி நடந்து கொண்டால் அவர் என்ன செய்ய முடியும்? அவர்தான் வன்முறையில் ஈடுபடச் சொன்னார் என்று ஏதாவது ஆதாரம் உண்டா? என்று கேட்டார் தலைமை நீதிபதி தத்து. இதை சற்றும் எதிர்பார்க்காத சுப்பிரமணியன் சுவாமி திருதிருவென முழித்தபடி அடங்கிப் போனார்.




« PREV
NEXT »