Latest News

October 21, 2014

இந்திய இராணுவத்தின் கோர தாண்டவம்; 27 ஆண்டுகள் நிறைவு
by admin - 0


இந்திய இராணுவத்தினால் யாழ்.போதனா வைத்தியசாலையில் 1987 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட 21 பேரின் 27 ஆண்டு நினைவு நாள் வைத்தியசாலையில் நேற்று காலை 10 மணிக்கு நடைபெற்றது.

 1987 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 21, 22 ஆம் திகதிகள் வைத்தியசாலைக்குள் நுழைந்த இந்திய இராணுவம் அங்கிருந்த வைத்தியநிபுணர், வைத்தியர்கள்  இருவர், தாதியர்கள் 2 பேர், தலைமை தாதிய பரிபாலகர், சிற்றூழியர் மேற்பார்வையாளர் மற்றும் சிற்றூழிகள் என 21 பேர் கொன்று குவிக்கப்பட்டனர்.

இவ்வாறு கொல்லப்பட்டவர்களை சமய சம்பிரதாயங்கள் எதுவும் இன்றி அங்கேயே குவியல்களாக போட்டு எரியூட்டியும் இருந்தனர். இது மட்டும் அல்ல வைத்தியசாலை பாதுகாப்பானது என எண்ணி உள்ளே வந்து ஒழிந்து கொண்ட பொதுமக்கள் என 89 பேர் கொல்லப்பட்டதுடன் 100ற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருந்தனர். 

 

இதனைவிட வைத்தியசாலைக்கு வெளியிலும் வைத்தியர்கள் பலர் இந்திய இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டு வீதியில் போட்டு எரியூட்டப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.



« PREV
NEXT »

No comments