Latest News

September 15, 2014

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பல்லாயிரம் தமிழர்கள் ஐ.நா முன்றலில் உரிமை முழக்கம்
by Unknown - 0

தமிழர் தாயகத்தில்  இலங்கை அரசாங்கத்தினால் நடாத்தப்பட்ட தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்டு ஐநா முன்றலில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் உலகின் பல பாகங்களிலும் இருந்து வந்து கலந்து கொண்டு உரிமை முழக்கமிட்டனர்.

ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் இன்று திங்கட்கிழமை 2.30 மணியளவில் இவ்வுரிமை முழக்கம் எழுச்சியுடன் இடம்பெற்றது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளின் 27வது கூட்டத் தொடர் நடந்து வரும் நிலையில் இப் புரட்சிகர நிகழ்வு முக்கியம் பெறுகின்றது.
இதில் பல மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பல தமிழ் இன உணர்வாளர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில், தியாக தீபம் திலீபன் மற்றும் போராளிகள், பொது மக்கள், ஈகைப் பேரொளிகளுக்கு சுடரேற்றலும், அகவணக்கமும் இடம்பெற்றது.
இப் போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வண்ணம் துவிச்சக்கர வண்டிப் பயணம் மேற்கொண்ட மூன்று தமிழ் இன உணர்வாளர்களும் முருகதாசன் திடலை அடைந்துள்ளனர்.
அத்துடன், இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் சுப்பிரமணிய சுவாமியின் கொடும்பாவிகளும் ஊர்வலத்தில் இழுத்து வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இப்போராட்ட நிகழ்வில் பொலிசாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



நன்றி tamilwin..
நன்றி

« PREV
NEXT »