Latest News

September 25, 2014

இனப்படுகொலை தவிர்க்கும் வடமாகாண சபை- எதிர்ப்பை வெளியிட்டார் சிவாஜி!
by admin - 0

தமிழ் மக்கள் மீதான இனப் படுகொலைகளில் இருந்து பாதுகாக்க சர்வதேச பொறிமுறையை ஏற்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்து சிவாஜிலிங்கம் முன்வைத்த பிரேரணை இன்றும் கைவிடப்பட்டுள்ளது. இனப்படுகொலை என்ற வசனம் சட்ட சிக்கலை ஏற்படுத்தும் எனக்கூறி வடமாகாண அவைத்தலைவர் மற்றும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் பிரேரணையினை ஏற்க மறுத்திருந்தனர்.
இதனிடையே தனது பிரேரணையினை ஏற்கப்படாமையினை கண்டித்து வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், கறுப்பு சால்வை அணிந்தபடி இன்றைய அமர்வில் கலந்துகொண்டார். தன்னுடைய பிரேரணை அமர்வில் எடுத்துக்கொள்ளப்படாமையை கண்டித்தே கறுப்பு சால்வை அணிந்து  தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியதாக தெரிவித்தார். 
வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபைக் கட்டிடத் தொகுதியில் வியாழக்கிழமை (25) இடம்பெற்று வருகின்றது. வடமாகாண நிறுவனங்களின் கீழுள்ள திணைக்களங்களைச் சார்ந்த அதிகாரிகள் மற்றும் அமைச்சின் செயலாளர்கள், வடமாகாண சபை அமர்வுகளில் கட்டாயமாக கலந்துகொள்ள வேண்டும் என வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் கடந்த அமர்வுகளில் வலியுறுத்தியிருந்தார்.

வடமாகாண சபையினால் அழைப்பு விடுக்கப்பட்டும் அமர்விற்கு வருகை தராமல் சபையையும் முதலமைச்சரையும் உதாசீனம் செய்யும் அமைச்சின் செயலாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் வலியுறுத்தியிருந்த போதும் அதை பொருட்படுத்தாது அதிகாரிகள் சிலர், இன்றைய அமர்வில் கலந்துகொள்ளவில்லை.
« PREV
NEXT »

No comments