Latest News

September 02, 2014

ஈக்வடார் எரிமலை சீற்றம் அதிகரிக்கிறது
by admin - 0

ஈக்வடார் நாட்டில் உள்ள துங்குராஹுவா எரிமலையின் சீற்றம் அதிகரித்திருப்பதாக அந்நாட்டின் பூகம்பவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். திங்கட்கிழமையில் மட்டும் 40 முறை அந்த எரிமலை வெடித்ததாக பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்த எரிமலையின் தீவிரம் குறைந்திருந்தாலும், திடீரென அதன் சீற்றம் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். கடந்த சில நாட்களாகவே அந்த எரிமலையிலிருந்து மூன்று கிலோ மீட்டர் உயரத்திற்கு சாம்பல் வெளியேறிவந்தது.

அந்நாட்டின் தலைநகரான கிடோவுக்கு தென் கிழக்கில் 135 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கும் துங்குராஹுவா எரிமலை 1999ஆம் ஆண்டுவரை அமைதியான நிலையில்தான் இருந்தது.

பள்ளிக்கூடங்களுக்கு இந்த ஆண்டின் முதல் நாள் என்பதால், திங்கட்கிழமையன்று எரிமலை வெடிப்புகள் தொடர்ந்துகொண்டிருக்கும் நிலையிலும், அந்தப் பகுதியில் வசிக்கும் பள்ளிக் குழந்தைகள், பள்ளிக்கூடங்களுக்கு வந்தனர். உள்ளூர் மொழியான குவெச்சாவில் துங்குராஹுவா என்றால் "நெருப்புத் தொண்டை என்று அர்த்தம். 5,023 மீட்டர் உயரமுள்ள இந்த எரிமலை, தென்னமெரிக்காவில் அடிக்கடி வெடிப்பு நிகழும் எரிமலைகளில் ஒன்றாகும்.

« PREV
NEXT »

No comments