Latest News

September 15, 2014

புலம்பெயர்ந்த தமிழர்களை தடை செய்யும் இலங்கையின் 2வது பட்டியல் தயார்?
by Unknown - 0

இலங்கையின் இனப் பிரச்சினைத் தீர்வில் மூன்றாம் தரப்புடன் ஈடுபடும் போது புலம்பெயர்ந்த அமைப்புக்கள் பேச்சுவார்த்தை தொடர்பான விவகாரங்களில் பங்குபற்றாமல் தடுக்கவே 15 புலம்பெயர் அமைப்புக்களின் மீதான தடையை அரசாங்கம் அமுல்படுத்தியது.

அந்த அமைப்புக்களோடு, இலங்கை படைகளால் 2009ம் ஆண்டு விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட வெளிநாட்டில் வதியும் தமிழர்களின் பட்டியலில் ஒரு பகுதியினரையும் அது இணைத்துள்ளதால் அவர்களும் பேச்சுவார்த்தை முயற்சிகளில் பங்கேற்க முடியாது என லங்காசிறி வானொலியின் நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் கனடாவைத் சேர்ந்த ஆய்வாளர் சுதர்மா குறிப்பிட்டார்.
இலங்கை அரசாங்கம் தடை செய்யப்பட்ட பட்டியலிலுள்ள அமைப்புக்களுடனோ அல்லது நபர்களுடனோ இனப்பிரச்சினை தொடர்பான எந்த சம்பாசனைகளையும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்றே சமாதான முயற்சிகளில் ஈடுபடும் தென்னாபிரிக்காவிற்கு கோரிக்கையை விடுத்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கு இடையே இனப்பிரச்சினை தொடர்பான உறவாடல் உச்சக்கட்ட நிலையை அடைந்துள்ளது என்பதனையே மகிந்த ராஜபக்ச மற்றும் கோத்தபாய ராஜபக்சவின் அண்மைய செயல்கள் எடுத்துக் காட்டுகின்றன.
மறுபுறமாக இலங்கை அரசாங்கம் புலம்பெயர்ந்த அமைப்புக்களில் சிலவற்றை வெறுக்கிறது, பயப்படுகிறது என்பதற்கு மேலாக முன்னர் வெளியிடப்பட்ட பட்டியலையொத்த, அது புதுக்குடியிருப்பில் கைப்பற்றிய ஆவணங்களின் மூலமும் அண்மையில் தென்னாசிய நாடுகளில் கைது செய்யப்பட்டவர்கள் மூலமாகவும் தயாரிக்கப்பட்டதாகக் கருதப்படும் மற்றுமொரு பட்டியலை அது ஐ.நா.வின் விசாரணைக்குழு அறிக்கை வெளிவரும் காலத்தில் வெளியிடலாம் என்பது உட்பட பல கருத்துக்களை அவர் பகிர்ந்து கொண்டார்.

நன்றி tamilwin..
« PREV
NEXT »